Posted by plotenewseditor on 31 August 2023
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிதி கையாளுகை தொடர்பில் இன்று(31) மன்றில் ஆஜராகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். Read more