நாட்டில் தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 3,93,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தொடர்ந்து சமுர்த்தி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மீள் பரிசீலனை செய்த பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். Read more
தேசியத்தை சுட்டெரிக்கும் நெருப்பில், குளிர் காய்வது முறையோ?
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று(03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இன்று(03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான தொழில்நுட்ப பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தயாராவதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வௌியிட்டுள்ளன. தொழில்நுட்ப பேச்சுவார்த்தை ஊடாக இரு நாடுகளுக்கிடைய ஸ்தாபிக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் கட்டமைப்பின் பௌதீக திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம், 5,450 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற முக்கிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மாகாண ரீதியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள் பாலங்கள் குழாய்கள் மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மற்றும் ஜப்பான் இணங்கியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் FUJIMARU Satoshi ஆகியோர் இடையே நேற்று(31) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்திருந்தது. குறித்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.