Header image alt text

(தேசியத்தின பால் ஈர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை)
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுவரை இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கம் எதுவும் கூறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

Read more

காலி சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் கடந்த நாட்களில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும், கைதிகளை வௌியில் அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வௌியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக் கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சிநிரலிடப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதால் எவ்வித குழப்பங்களும் இல்லை என வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப்பேருரை நிகழ்வில் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்கள் கலந்து கொண்டிருந்த போது… Read more

Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. வௌியுறவு அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறித்த கப்பலுக்கு இவ்வாறு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழுக் கூட்டம் இன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நிர்வாக விடயங்கள் பல ஆராயப்பட்டு அவை தொடர்பான முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.

Read more

கடல் நீரை சுத்திகரித்து நாளாந்த பயன்பாட்டிற்கான நீரை பெற்றுக்கொள்ளும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் 60,000 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 இலட்சம் பேருக்கு நீர் வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருட முற்பகுதியில் பணிகளை நிறைவு செய்ய முடியும் எனவும் சபை தெரிவித்துள்ளது. Read more

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யும் அளவிற்கு போதிய விடயங்கள் இல்லை என சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டு நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…