Header image alt text

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள  நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. Read more

ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ரயில்வே நிலையத்தில் கடமையாற்றும் உப ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. Read more

புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா வெளிக்குளத்தில் வசிக்கும் திரு. திருமதி சுந்தரராஜன் அகஸ்ரா தம்பதியினரின் வாழ்வாதாரத்திற்காக 1,45920/- ரூபா பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்புப் இயந்திரங்களும், அதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக 33,080/- ரூபா நிதியுதவியுமாக மொத்தம் 179,000/- பெறுமதியான உதவி இன்று (24.08.2023) வியாழக்கிழமை கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

Read more

புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் வசிக்கும் தோழர் குகன் (கனகசபை கந்தவனம்) அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 203,000/- ரூபா நிதி உதவி கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று (24.08.2023) வியாழக்கிழமை கட்சியின் வவுனியா அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Read more

24ஆம் ஆண்டு நினைவுகள்

Posted by plotenewseditor on 24 August 2023
Posted in செய்திகள் 

Read more

நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். Read more

இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது. 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார். Read more

யாழ். ஆறுகால்மடம், புதுவீதியைச் சேர்ந்தவரும், பிரான்ஸ், பாரீஸை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளையின் அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நல்லதம்பி அம்பிகாபதி அவர்கள் நேற்று (22.08..2023) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு(22) நாடு திரும்பியது. சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், நேற்றிரவு 11.27 அளவில் குறித்த குழு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். Read more