சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் கூடிய சில வாகனங்கள் இராணுவ தலைமையகத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டன. பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் வாகனங்களை பெற்றுக்கொண்டனர். Read more
		    
22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலையை அண்மித்து பரவிவரும் அடையாளம் காணப்படாத நோயொன்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.  
கார்பன் வெளியேற்றம் தொடர்பான (Carbon Credits) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-உடனான சந்திப்பின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.  
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கலைமாமணி எஸ்.குகனேஸ்வரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக எமது கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 19/08/2023 – 20/08/2023 வரை வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் மண்டபத்தில் அறநெறி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி எனப்படும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அவதானமாக செயற்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி 39 மற்றும் 45 செல்சியஸ் இடையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை சிங்கப்பூருக்கு பயணமானார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாக்கூப்(Halimah Yacob) இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 
திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறாத்தீவை பொதுமக்கள் மீண்டும் பார்வையிடுவதற்கான திட்டத்தை கடற்படை ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையின் மத்தியப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறா தீவினை பார்வையிடுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த கட்டணங்களுடன் தரமான சேவை வழங்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று முதல் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.