13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 13 August 2023
Posted in செய்திகள்
13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 13 August 2023
Posted in செய்திகள்
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதனூடாக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் வாய்ப்பை பெறவுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 13 August 2023
Posted in செய்திகள்
தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய மக்களவையின் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மோடி இதனை கூறியுள்ளார். தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாகவும் அவ்வாறு வழங்கியதன் பின்னர், கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தனக்கு கடிதம் எழுதி வருவதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 12 August 2023
Posted in செய்திகள்
12.08.2005இல் கொழும்பில் மரணித்த தோழர் சின்னத்துரை செல்வராஜா (ஓமந்தை), அன்னாரின் துணைவியாரான இலங்கை வானொலி, தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 12 August 2023
Posted in செய்திகள்
12.08.2020இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன் – அரசடி) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று….Posted by plotenewseditor on 12 August 2023
Posted in செய்திகள்
இன்றைய தினம் வவுனியா பொது நூல்நிலைய நூலகர் மு.ரஞ்சிதமலர் அவர்களின் தலைமையில் ஒரு தொகை நூல்கள் உமாமகேஸ்வரன் நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது Read more
Posted by plotenewseditor on 12 August 2023
Posted in செய்திகள்
இலங்கையில் உள்நாட்டு – வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துவதற்கான (பொதுமக்கள் பார்வையிடுவதற்கான) சட்ட ரீதியான அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1912 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொது அரங்காற்றல் சபை சட்டத்தின் கீழ், வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவிற்கமைய, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 12 August 2023
Posted in செய்திகள்
சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளமை தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது. சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், கப்பலின் வருகை குறித்து இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 11 August 2023
Posted in செய்திகள்
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக, அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. சைவ ஆதாரங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்களை வெளிநாடுகள் வரை கொண்டு செல்லும் போது தமது செயற்பாடுகளிலிருந்து தொல்லியல் திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2023
Posted in செய்திகள்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11) முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான மதுஷங்க திசாநாயக்க, தகவல் கட்டமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுள்ள மதுஷங்க திசாநாயக்க, குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.