முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன்
தலைமையிலான குழுவினர் இன்று கள விஜயம் செய்தனர். தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி மற்றும் ஏனைய திணைக்கள பிரதிநிதிகளும் இந்த கள விஜயத்தில் இணைந்திருந்தனர். Read more
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
09.08.2022இல் வவுனியாவில் மரணித்த தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை – மூதூர்) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்
09.08.2022இல் மன்னாரில் மரணித்த தோழர் மரியான் (தீயோகு மரியதாஸ் – பள்ளக்கமம்) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்
வடக்கு, கிழக்கு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தம்பிலுவில் விஷ்ணு கோவில் முன்பாகவிருந்து அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்(Insulin) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரியதற்கு அமைவாக அனுப்பப்பட்ட கடிதம்.
கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு திணைக்கள அதிகாரிகள் கள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு நாளை மறுதினம் (10) கள விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் T. பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வவுனியா – ஆதி விநாயகர் திருக்கோவில் பரிபாலன சபையின் சார்பில் ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் வட மாகாணத்திற்கான மாகாண மற்றும் மாவட்ட கராத்தே போட்டிகளில் பங்குபற்றி ’34’ பதக்கங்களைப் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட INTERNATIONAL MARTIAL ARTS ASSOCIATION யின் வவுனியா கிளை மாணவர்கள் இன்று ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தின விழாவில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வணக்கத்திற்குரிய குகனேச்வரசர்மா ,