திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பயிற்சி விமானம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டார்.
வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 4 மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரியதற்கு அமைவாக அது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவது குறித்து இன்றுகாலை 10மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நிறைவேற்றுக்குழு கூட்டம் மெய்நிகர் வழியாக நடைபெற்றது.
அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார். இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
05.08.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் கண்ணாடிக் குமார் (ஆறுமுகம் உதயகுமார்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுகள்…
மலர்வு 1937.07.09 உதிர்வு 05.08.2023
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன், அதில் வேறு எவருக்கும் சந்தரப்பம் இருக்கும் என தாம் கருதவில்லை எனவும் இலங்கை உயர்ஸ்தானிகர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நிலா எனும் பெயரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார். பிரதி சனிக்கிழமைகளில் கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (04) சென்று பார்வையிட்டார்.