 ஜேர்மன் நாட்டின் Ludwigsburg பகுதியில் வதியும் சுபாங்கி பவானந்த் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை (25.04.2021) முன்னிட்டு, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிளாலிப் பிரதேசத்தில் வதியும் இரு குடும்பங்களுக்கு, அவர்களது குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ 45,000/- நிதியுதவியினை, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை மூலம் வழங்கி வைத்துள்ளார்.

கிளாலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பு நாகம்மா, மாணிக்கம் சிவராசா ஆகியோரின் குடும்பத்தினர் மேற்கொள்ளவுள்ள வெங்காயச் செய்கைக்காக இந் நிதி வழங்கப்படவுள்ளது.
மேற்படி நிதியுதவியில் வெங்காயச் செய்கை இலாபகரமாக மேற்கொள்ளப்படுமிடத்து பயனாளிகளிடமிருந்து பகுதியளவில் மீளப் பெறப்படும் பணம், மீண்டும் சுழற்சி முறையில் இன்னோர் பயனாளிக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
உதவிக்காக ஏங்கி நிற்கும் மனநிலையில் இருந்து எமது சமூகத்தை படிப்படியாக மீட்டெடுக்க வேண்டும் எனும் எண்ணத்தின் பிரகாரம் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்திட்டம் தென்மராட்சி பிரதேச சமூக செயற்பாட்டாளர் ஆ. சிவகுமாரன் அவர்களின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.