தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் எந்தவொரு செயலிலும் ராஜபக்ஷக்கள் ஈடுபடக்கூடாது என்பதே அடிப்படை எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கருத்தை நாங்கள் ஏற்கெனவே ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின் நகல்களை கடிதத்துடன் இணைத்துள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.