அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னையால்  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்குமாறும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.