வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் குடிநீர் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொறியியல் ஆலோசகர்கள், தலைமைப் பொறியாளர், வட மாகாணப் பொறியாளர், வட மாகாண திட்ட அமுலாக்கல் அதிகாரி மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பிரதேச சபையின் சார்பில் உள்ளூராட்சி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், புதிய வேலர் சின்னக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆகியோருடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
இது பின்தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் (Ridep) ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் 160 மில்லியன் ரூபா உதவியில் இந்த திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது . இதில் முதல் கட்டமாக 140 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட இருக்கிறது.