மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பாரதி மகளிர் அபிவிருத்திச்சங்கத்தினர் பத்து(10) பேருக்கு சிறு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக
ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள கழகத் தோழர்களின் நிதிப்பங்களிப்பில், கட்சியின் சமுக மேம்பாட்டு பிரிவினால் குறிப்பிட்ட அமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாய்(100,000/-) நிதி உதவி 02-10-2022 ம் திகதி புதுக்குடியிருப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மாநகர சபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் கட்சியின் சமுக மேம்பாட்டு பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், மத்தியகுழு உறுப்பினர் க.கிருபைராஜா, கட்சியின்
மாவட்ட செயலாளர் கா.கமலநாதன், பொருளாளர், க.விமலநாதன், மாவட்ட மகளிர் அணியின் அமைப்பாளர் சீ.இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
