பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அகால மரணங்கள் காரணமாக குடும்பத் தலைவர்களை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா வாழ் உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் கட்சியினுடைய சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வலி. தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இணுவில் மற்றும் உடுவில் கிராமங்களில் வசிக்கின்ற இரண்டு குடும்பங்களுக்கு குறித்த அத்தியாவசிய பொருட்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. இவ் உதவிகளை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரவதனி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.