வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சில வழக்குகள் தொலைகாணொளி ஊடாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.