வடக்கு, கிழக்கு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தம்பிலுவில் விஷ்ணு கோவில் முன்பாகவிருந்து அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை ​பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக  போராட்டத்தில் ஈடுபட்டனர்.