அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர்  Nathaniel C. Fick உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு, இணையவௌி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன தொடர்பில் Nathaniel C. Fick, கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
பெங்களூரில் நடைபெறும் G -20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தில் அமெரிக்க தலைமை பிரதிநிதியாக கலந்துகொள்வதற்காக இன்று அவர் இந்தியா செல்கின்றார்.
Nathaniel C. Fick எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.