வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. சித்தி விநாயகர் முன்பள்ளியின் ஆசிரியைகள் வி.நீரஜா, ச.டினோசா ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் டர்ஜினா சுகுமார்,
எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.மயூரன், வவுனியா தெற்கு முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன், வவுனியா தெற்கு முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.பரஞ்சோதி, கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலை அதிபர் எஸ். உதயகுமார்,
எமது கட்சியின் நிர்வாகச் செயலாளர் பற்றிக், வெண்புறா அமைப்புத் தலைவர் த.தனஞ்சயன், சித்தி விநாயகர் ஆலயத் தலைவர், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர், முதியோர் சங்கச் செயலாளர் ஆகியோரும், திரு. சந்திரகாந்தன் முரளி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள்,
லக்சுமணன் நற்பணி மன்ற தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள், மாதர் சங்கத் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள், சுப்பர் ஸ்டார் நற்பணி மன்ற தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள், பெற்றோர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 