ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche இன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். அத்துடன், காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் ஆகியோரையும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது,   தமிழ் சமூகத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து   கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவையும் சந்தித்துள்ள அவர், பொருளாதார சீர்திருத்தங்கள், சட்டவாட்சி, நல்லாட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.