ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழுக் கூட்டம் இன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நிர்வாக விடயங்கள் பல ஆராயப்பட்டு அவை தொடர்பான முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.
 
 
 
 
 