Header image alt text

திருகோணமலையிலும் மனித எச்சக் குழியென சந்தேகம்

trincomalee_mass_graveஇலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றின் குழியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புகள் காணப்படுவது குறித்து காவல் துறை தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. நகரசபை நிர்வாகத்திலுள்ள மெக்கசர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களினால் இவை கணடு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மைதானத்தில் குறிப்பிட்ட பகுதி துப்பரவு செய்யப்பட்ட போது 5 அடி ஆழத்தில் காணப்பட்ட குழியொன்றில் இந்த எலும்புகள் காணப்பட்டதாக கூறினார். காவல் துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹன. இந்த எலும்புகள் மனித எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையால் திருகோணமலை நீதிமன்றத்தில் இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை மாலை மஜிஸ்திரேட் டி. சரவணராஜா அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். எதிர்வரும் புதன்கிழமை வரை அந்த பகுதிக்குள் வெளியார் நடமாட்டத்திற்கு தடை விதித்த அவர், பாதுகாப்பு உறுதிப்படுத்தல் தொடர்பிலும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

காணாமல் போனவர்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில்

missing_people_enquiry_jaffnaஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் மருததுவ பிரிவில் பணியாற்றிய ரேகா என்றழைக்கப்படும் மகேந்திரராசாவை இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது இராணுவத்தினரிடம் கையளித்த அவரது மனைவி மற்றும் உள்ளுர் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் சாட்சியமளித்திருக்கின்றனர். Read more

ஏ-9 வீதி விபத்தில் 5பேர் மரணம் 6பேர் படுகாயம்

untitledஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைற்கல் பகுதியில் வானொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதி இன்றுக்காலை விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஐவர் பலியானதுடன் ஆறு பேர்  படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விபத்தில் சசிதரன் பதுமன் (05), சசிதரன் யர்மிதா (07), சோதிலிங்கம் மிதீபன் (35), சின்னத்துரை பரமேஸ்வரி (75), சின்னத்துரை சிவனேஸ்வரன் (49) என்பவர்களே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், சசிதரன் சர்மிளா (30) சிவனேசன் செந்தூரி (12), சிவனேசன் கபினா (08), சிவனேசன் தர்மினா (31), ஜெயக்குமார் தயாநிதி (53), சோதிலிங்கம் சஜீவன் (38) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதிலிங்கம் சஜீவனை தவிர ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

‘மஹிந்த ராஜபக்ஷ  சிறப்பு பாடசாலை சகல மாகாணங்களிலும் -பந்துல குணவர்த்தன

mmநெனச செயற்த்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை, உவர்மலை விவேகானந்த கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றும்போது மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளும் சிறப்பு பாடசாலை இந்த வருடத்திற்குள் கிழக்கு மாகாணத்தில்  நிர்மாணிக்கவுள்ளதாக அவர் தெரித்தார். இது போன்ற பாடசாலையொன்று ஏற்கனவே ஹோமாகம பிரதேசத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். அத்துடன் திருகோணமலை பிரதேசத்தில் கல்விக் கல்லூரி ஒன்று இல்லை என்ற குறை மிக நீண்ட காலமாக உள்ளது. இந்த ஆண்டில் கல்விக் கல்லூரியொன்றை இங்கு ஆரம்பித்து வைக்கவுள்ளோம்’ என்றார். இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள 121 பாடசாலைகளுக்கு டயலொக் நிறுவனத்தின் அநுசரணையில் 65,000 ரூபா பெறுமதியுடைய 32 அங்குல எல்ஈ.டீ தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர்களான எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

விபத்தில் தாயும், மகளும் மரணம்

kaiமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை (11-02-14) இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந் சாதனா என்ற தாயும் 03 வயதான  ஆனந் யதுசிகா என்ற அவரது மகளும் மரணமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார்  தெரிவித்தனர். அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த  ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்  எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்டபோது, எதிரே வந்த கன்டர் ரக வாகனம்  மோதி  விபத்து சம்பவித்ததாகவும் இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைதுசெய்ததாகவும். இவர்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 யாழில் ஐ.நா.வின் பிரதிநிதி ஹாலியாங் சூவ் வடக்கு ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார்.

 140211172806_vigneswaran_304x171_bbc_nocreditஇது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

மூன்றாம் தரப்பின் உதவி இல்லாமல் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதென்பதுடன், இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித தீர்வையோ, வேறு எதனையோ பெற்றுக்கொள்ள முடியாதென்று. யாழ்ப்பாணத்திற்கு  செவ்வாய்க்கிழமை (11.02.14) விஜயம் செய்த ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஹாலியாங் சூவுடனான  சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறினார்.  Read more

கிளி- இராமநாதபுரம் அ.த.க பாடசாலை பிள்ளைகளுக்கு ‘புளொட்’ உதவி!! – 

DSC00707கிளி-கிழக்கு இராமநாதபுரம்  அ.த.க பாடசாலை புலமைப்பரிசில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான கவுரவிப்பு நிகழ்வு கிளி-கிழக்கு இராமநாதபுரம்  அ.த.க பாடசாலை அதிபர் ச.புண்ணியமூர்த்தி தலைமையில் பிரதம அதிதிகளான ஒய்வு பெற்ற கல்விப்பணிப்பார் திரு.கோ.செல்வராஜா ஆரம்ப பிரிவு கல்விப் பணிப்பாளர் திருமதி வசந்தா மற்றும் புளியம்பொக்கணை அதிபர்  திரு.ரவீந்திரன் இமாயவனூர் பாடசாலை அதிபர் திரு.கோபாலராசா அவர்களும் விழாவை சிறப்பித்து மாணவர்களுக்கான கேடயங்களையும், பதக்கங்கள் மற்றும் சகல மாணவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகங்களையும் வழங்கி கவுரவித்தனர்

லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி மற்றும் கேடயங்கள்இ பதக்கங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

DSC00686DSC00676DSC00699DSC00693DSC00691

 

கோவில் வீதியை பள்ளிவாசல் வீதியாக மாற்ற முயற்சி-

pallivasal veethiyaaka matra muyatchiஅம்பாறை மாவட்டம் கல்முனை தரவை பிள்ளையார் கோயில் வீதியின் பெயரை மாற்றுவதற்கு மாநகர சபை நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிவித்து, கல்முனையில் இன்று அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பெயரை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக பெயர்மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இந்த வீதியின் பெயர் மாற்றப்பட்டால், தரவைப் பிள்ளையார் கோவில் வீதியின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மதத் தலைவர்களும் அதிருப்தி வெளியிடுகின்றனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவர்கள் கல்முனை மாநகர சபை முதல்வர் நிசாம் காரியப்பர், கல்முனை தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரிடம் மகஜர்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இரு அதிவேக நெடுஞ்சாலைகள் மார்ச்சில் திறக்க ஏற்பாடு-

வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலையும் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் மார்ச் 8ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலை மார்ச் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விருப்பு இலக்கங்கள் நாளை விநியோகம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாகாண சபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய வேட்பாளர்களின் பெயர் முதலெழுத்துக்கள் அடிப்படையில் சிங்கள அகரவரிசை ஒழுங்கில் தேர்தல்கள் அலுவலகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் விருப்பு இலக்கங்கள் தற்போது சிரேஷ்ட அதிகாரிகளின் பரிசீலனைக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.; இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்காக தேர்தல் மூலம் 155 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 40 பிரதிநிதிகளும், களுத்துறை மாவட்டத்தில் 22 பிரதிநிதகளும் தெரிவாகவுள்ளனர். காலி மாவட்டத்தில் 22 பிரதிநிதிகளும், மாத்தறை மாவட்டத்தில் 17 பிரதிநிதிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 பிரதிநிதிகளும் தென் மாகாண சபைக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியின் மேலும் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு-

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டிபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் திகதி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 19 நாட்கள் இந்த புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 54 மண்டையோடுகள் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றில் 28 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. ஒன்பது நாட்களுக்கு பின்னர் இன்று 20 ஆவது தடவையாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறுவர் போராளியாக இருந்தவருக்கு 14 வருடங்களுக்கு பின் மரணதண்டனை-

புலிகளின் சிறுவர் போராளியாக இருந்தபோது கொலை குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு 14 வருடங்களுக்கு பின் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு கிண்ணியாவிற்கு அருகிலுள்ள உப்பூர் எனும் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை புலிகளுடன் சேர்த்து கொலைசெய்த குற்றச்சாட்டில் 14 வயதாக இருந்தபோது மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். ஆலங்கேணியை சேர்ந்த தங்கராஜா சிவகந்தராஜா எனும் புலிகளின் சிறுவர் போராளியான இவர் 1990ஆம் ஆண்டு சீனகுடாவில் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டிருந்த விசேட நீதிமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போதிலும் போதிய சாட்சியங்கள் இன்மையால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 3 வருடங்களின் முன்பு மேற்படி வழக்கு மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் சந்தேக நபரின் சார்பாக ஆஜராகினார். அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எல்.சாலி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி சந்தேகநபருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரணராஜா மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குறித்த சந்தேகநபர் பிணையில் சென்றிருந்த காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் மீள வலியுறுத்து- 

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு போர்க்குற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் மீளவும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வெளிவிவகார பொதுநலவாயத்துறை அமைசர் ஸுவைவர்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அங்கு நடந்தேறிய போர்க் குற்றம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தி உள்ளார். இதையே பிரிட்டன் முழுமையாக விரும்புகின்றது. இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய செயல்பாடாக சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது. பிரதமர் டேவிட் கமரூன் முன்னரே குறிப்பிட்டதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வெளிப்படையான விசாரணை தொடங்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்த பிரிட்டன் முயற்சி எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறியுள்ளார்.

யாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது  நினைவு தினம் அனுஷ்டிப்பு-

GG Ponnampalam (13)GG Ponnampalam (4)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 37 ஆவது நினைவு தினம் யாழ் குருநகரில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியடியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி,  புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தர்த்தன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

GG Ponnampalam (8)GG Ponnampalam (7)GG Ponnampalam (6)GG Ponnampalam (5)GG Ponnampalam (1)GG Ponnampalam (2)GG Ponnampalam (11)GG Ponnampalam (12)GG Ponnampalam (5)

வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குடிதண்ணீர் வசதி வழங்கிவைப்பு-

kudineer vasathi valankal (5)யாழ். மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க முன்பள்ளிக்கு குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் செய்து கொடுத்துள்ளார். வசதியற்றோரின் சிறார்களது கல்வி வளர்ச்சிக்கு ‘தமது வடமாகாண சபை ஊதியத்தில் இருந்து’ உதவி செய்யும் திட்டத்தின் ஓர் பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க தலைவர் ராஜாராம், வரவேற்புரை நிகழ்த்தியதுடன், செயலாளர் தசரதன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் வடமாகாண சபை முதலாவது அமர்வின்போது திரு. சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்ததுக்கு அமைய தனது வடமாகாண சபை சம்பளத்தில் இதுபோன்ற உதவியை வழங்கியமையிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

kudineer vasathi valankal (1)kudineer vasathi valankal (2)kudineer vasathi valankal (3)kudineer vasathi valankal (4)kudineer vasathi valankal (6)

ஆளும் கட்சியின் வேட்பாளர் பிணையில் விடுதலை-

பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அஜித் பிரசன்னஹேவா தொடங்கொடவத்த உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலியிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டிருந்த வேட்பாளர் உட்பட இருவரும் பொலிஸாரால் வளஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக தேர்தல் பேரணி நடத்தியமை, சட்டவிரோத கூட்டமொன்றுக்கு உறுப்பினராகியமை, பொலிஸ் அதிகாரியொருவரைத் தாக்கி அழுத்தம் பிரயோகித்தமை, இராணுவ சீருடையை அணுமதியின்றி அணிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம-;

புதிய விவசாய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பண்டுக்க வீரசிங்க கூறியுள்ளார். விவசாய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ள விவசாயிகளின் வயதின் அதிகரிப்பிற்கு அமைய கொடுப்பனவு அதிகரிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விவசாய ஓய்வூதி திட்டத்திற்கு பயனாளிகளை இணைத்திற்கொள்ளும் நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்கு கமநல காப்புறுதி சபை உத்தேசித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பு திருத்தம்-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யாப்பில் காலத்துக்கு ஏற்றவகையில் சில சரத்துக்கள் திருத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நேரடியான நடவடிக்கை எடுக்கவும், தேசிய ரீதியாக விசாரணைகளை நடத்தவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் வகையில் அதன் யாப்பு சீர்த்திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இதற்கான பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை கைதுசெய்வதை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை-

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கையிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணயசாமி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இலகுப்படுத்தும் வகையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் 80 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநகரில் குண்டு மீட்பு- 

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறைப் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் தெரிவித்துள்ளனர். அதன்படி கைக்குண்டு ஒன்று குருநகர் இறங்குதுறைப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் மேற்படி குண்டினை மீட்டுச் சென்றுள்ளதுடன் அதனை செயலிழக்கவும் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்திய மாநில முறைமை  அமுல்படுத்தப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

untitledதனி ஈழம் ஒன்றை நிறுவ வேண்டுமென கோரவில்லை, இந்திய மாநில முறைமை இலங்கையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தினார் எனவும், தற்போது தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும்;. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு தமிழ் மக்களின் 500 ஏக்கர் காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருவகிறார்கள் என சுட்டிக்காட்டி. ஒரே நாட்டுக்குள் எவ்வித பேதமும் இன்றி வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (இந்திய முறையிலான தீர்வே சிறந்தது, பொருத்தமானது நாம் விரும்புவது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நீண்ட காலமாக கூறிவருகின்றார் என்பதும்.. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் இ;வகையான ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வாய்பாய் அமைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)

வாள், சீருடையுடன் நால்வர் கைது- யாழில்

imagesCA2C7RO4யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி இருந்த 4 பேரை தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வைத்து 07.02.14 இரவு கைது செய்துள்ளதாகவும். அத்துடன், அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாவும். நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலக்கு இடையில் மனிதாபிமானப்பணி-சிரியாவில் ஜநா

140208131451_homs_304x171_reuters_nocreditசிரியாவின் ஹோம்ஸ் நகரில் மோதலில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க ஐநா ஆயத்தமாகிவரும் சூழலில், இவ்வூரில் கடந்த மூன்று நாட்களாக இருந்துவருகின்ற போர்நிறுத்தம் குலைய மற்ற தரப்பே காரணம் என சிரியாவின் அரச படையினரும் கிளர்ச்சிக் குழுக்களும் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டிவருகின்றனர். கடந்த வெள்ளியன்று ஐநாவின் அனுசரணையில் நிவாரணப் பணிகள் ஆரம்பித்திருந்த இடங்களில் மோர்டார் குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன. உதவிப் பொருட்களை சுமந்துசெல்லும் வாகனத் தொடரணியால் அப்பகுதிக்கு செல்லமுடியுமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களாக எண்பதுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக அரச படைகளின் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட மக்கள் மிகுந்த பலவீனமாக காணப்படுகிறார்கள். தாங்கள் அனுபவித்த அளவுக்கதிகமான கஷ்டங்களை இவர்கள் விவரித்துள்ளனர் என செய்திகள் தெரிpக்கின்றன.

மக்கள் சுதந்திரமாக வாக்குமூலம் அளித்தனர்- மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditஇலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவருபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் பற்றி தங்களுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் நடந்த விசாரணை அமர்வுகளின்போது, ‘மக்கள் சுதந்திரமாக, சுயவிருப்பத்துடன்’ தங்களின் வாக்குமூலங்களை அளித்துச் சென்றதாகவும் மக்கள் அச்சுறுத்தப் பட்டதாகவோ, பலவந்தப் படுத்தப்பட்டதாகவோ தமக்குத் தகவல் வரவில்லை என்றும் அவர் கூறினார். Read more

இலங்கையில் தமிழ் மொழி மீது தொடரும் ‘மாற்றாந்தாய் மனப்பான்மை’ (பிபிசி)

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkஇலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக செயற்படுகின்றன. மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.

அரசின் மொழிக் கொள்கை பற்றி கேள்விகள் அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் தவறாக எழுதப்படுகின்றமை தொடர்பில் தமிழோசை எழுப்பிய கேள்விகளும் பதில்களும் Read more

பதாகைகள் ஏந்தி, பாராளுமன்றில் எதிர்ப்பு நடவடிக்கை- ஐ. தே. க.

2727_1_thumb_parliamentமின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே. க.வினர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் நேற்றுப் பிற்பகல்  கூடியது.
வழக்கம் போன்று வாய் மூல வினாவுக்கான விடைகள் வழங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கவினால் மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் உட்பட ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவர இருந்தது.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்குமாறு சபைக்கு தலைமை வகித்துக்கொண்டிருந்த பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.
பிரேரணையை கொண்டுவர இருந்த ரவி கருணாநாயக்க உட்பட எதிர்க் கட்சியின் எம்.பிக்கள் சபையில் வீற்றிருந்தனர். பிரதி சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து ரவி கருணாநாயக்க ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைப்பதற்கு பதிலாக பால் மா அதிகரிப்பு தொடர்பிலான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் எதிர்க் கட்சியினர் சகலரும் எழுந்து நின்றதுடன் சிலர் சபைக்கு நடுவில்வர முற்பட்டனர். இதனையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்ததை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பதாகைகளுடன் சபையின் நடுவிற்கு வந்த ஐ. தே. க. எம்.பிக்கள் சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் சென்று பதாகைகளை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.