சர்வதேச முனைப்புகளுக்கு ஆதரவு – ரமபோஷா

ramaposha_vikki_003இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் முனைப்புகளுக்கு ஆதரவாகவே தமது நடவடிக்கைகள் அமையும் என தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சிரில் ரமபோஷா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இ;ன்று தமமை சந்தித்தபோது ரமNபோஷா இந்த கருத்தை தெரிவித்ததாக வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தென்னாபிரிக்காவின் நல்லிணக்கம் நடவடிக்கைகளில் இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வை மேற்கொள்ளவதற்காக தாம் வந்ததாக ரமபோஷா தெரிவித்ததாகவும், வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சிறில் ரமபோஷாவிற்கு தாம் விரிவாக எடுத்துக் கூறியதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். இதேவேளை சிறில் ரமபோஷாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்றுகாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களை, முன்னுதாரணமாக கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தன்னார்வ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை-ஐ.நா அவதானம்-

இலங்கையில் இயங்கிவரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளை மீறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு ஒத்திவைப்பு-

அவுஸ்திரேலியாவில் 153 இலங்கை அகதிகளுடன் இடைமறிக்கப்பட்டுள்ள படகு தொடர்பான வழக்கு விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது. அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று தொடர்ந்தபோது குறித்த 153 அகதிகளையும் திருப்பியனுப்புவதானால் அது தொடர்பில் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் உறுதியளித்துள்ளது அதேநேரம் அரசாங்க அதிகாரிகள் குறித்த 153 பேரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு கடத்தப்பட்ட 41 அகதிகளில் 36 பேர் இன்று காலி நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்ஜசீரா ஊடகவியலாளரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை-

அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அறிக்கையிட்டமை குறித்து அல்ஜசீரா ஊடகத்தின் ஊடகவியலாளர் டினோக் கொலம்பகேவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.