Header image alt text

திருமலையில் நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி-

thirumalaiyil neer kaakam koottu payitchiஇலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து நடத்தும் ‘நீர்க்காகம்’ கூட்டுப்பயிற்சி, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதிமுதல் 23ஆம் திகதிவரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. முப்படைகளையும் சேர்ந்த 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 6 நாடுகளைச் சேர்ந்த படைவீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். திருகோணமலையிலுள்ள காட்டுப்பகுதியில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.

செப். 4, 5இல் ஊவா மாகாணசபை தபால்மூல வாக்களிப்பு-

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ஊவா மாகாண சபைக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 30ஆயிரத்து 655 தபால் மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நவநீதம்பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்-

navaneethampillai oyvuஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு-

yaalil pirathaana rail nilaiyankal (2)yaalil pirathaana rail nilaiyankal (1)யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ரோபர் மாதம் கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை-

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் காணால் போனதாக கூறப்படும் நான்கு தமிழக மீனவர்கள் குறித்த இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை முதல் குறித்த மீனவர்கள் நான்கு பேரும் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மீனவர்களின் படகில் நீர் புகுந்த நிலையில், அவர்களை மீட்பதற்கு ஏனைய மீனவர்கள் முயற்சித்திருந்த போதும், குறித்த மீனவர்கள் மூழ்கும் படகினை கைவிட்டு வர மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் இதுவரையில் கரை திரும்பாத நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

பண்டத்தரிப்பு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு-

IMG_9035யாழ். பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலையை வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. சயந்தன் ஆகியோர் நேற்று (28.08.2014) சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், அங்குள்ள குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திரு. கேதீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு வைத்தியசாலையின் நிலைமைகளைப் பார்வையிட்டார். பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு நடராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வைத்தியசாலை தரப்பினர் தங்களுடைய குறைகளைக் கூறினார்கள். பெருந்தொகையான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். அங்கு சுற்றுமதில் இல்லாமை, வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் பற்றாக்குறை, இப்படிப் பல்வேறு தேவைகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அங்கு போதியளவு கட்டிடம் இருந்தும் பல தட்டுப்பாடுகள் உள்ளதனால் வைத்தியசாலை சரியான முறையில் இயங்காமல் இருப்பது பற்றியும் இங்கு எடுத்துக்கூறப்பட்டது, இக் குறைபாடுகளில் பலவற்றை நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்தார். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மாகாணசபை உறுப்பினர்களும் கவனம் செலுத்தியதுடன், மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்கள்.

Pandatheruppu vaithiyasalai nilaimai aarrayvu (3)IMG_9030IMG_9036IMG_9035IMG_9045IMG_9048IMG_9046-01IMG_9050

பாகிஸ்தான் – இலங்கை விமானப் படைத்தளபதிகள் சந்திப்பு-

Pakistan Srilanka vimaanapadai santhippuஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் விமானப் படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹீர் ரபீக் பட் இலங்கை விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்கவை நேற்றையதினம் கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. சந்திப்பின் இறுதியில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளும் நினைவு பரிசுகளையும் பரிமாறிக் கொண்டதாக விமானப்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவு-

ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 54 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 12 முறைப்பாடுகளும் அடங்குகின்றன. அரச உத்தியோகத்தர்களை அரசியற் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்கள் பாவனை தொடர்பில் 07 முறைப்பாடுகளும், சுவரொட்டிகள் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.

ரயிலில் குழப்பம் விளைவித்த இராணுவத்தினர் கைது-

யாழ்தேவி ரயிலில் குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பரிசோதகருடன் ஏற்பட்ட தகராறு காணரமாக பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவத்தினர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.தேவி ரயிலில் அனுராதபுரத்தில் வைத்து இராணுவத்தினர் ஏறியுள்ளனர். ரயில் பரிசோதகருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, அவர்மீது மூன்று இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான ரயில் பரிசோதகர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ தொழிநுட்ப பணியாளர்களின் பணிநிறுத்தம்-

மருத்துவ தொழினுட்ப பணியாளர்களின் பணிநிறுத்த போராட்டம் ஆரம்பிக்;கப்பட்டு 76 மணித்தியாலங்களில் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியுயர்வுகள் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் ஆரம்பமான குறித்த பணிநிறத்த போராட்டம் காரணமாக மருத்துவமனை பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்துப்பொருள் விநியோகம் மற்றும் ரசாயன ஆய்வு பரிசோதனைகள் என்பன இடம்பெறவில்லை. நேற்றுமுன்தினம் மதியம் 12மணி தொடக்கம் அத்தியாவசிய மருத்துவ சேவைகளிலிருந்து மருத்துவ தொழினுட்ப வியலாளர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேறி 8வருடங்கள் கடந்தும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை-

meel kudiyeri 8 varudankalaakiyumசுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட தமக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் 1,476 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற போதிலும், 75 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். எவ்வித வசதிகளுமற்ற இந்தப் பகுதியில் வசிக்கும் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி, தொழில்வாய்ப்பு, திருமணம் என்பன காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையால் தடைப்பட்டுள்ளதாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். மண்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியிலுள்ள 243 குடும்பங்களும், Read more

இந்திய அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு நம்பிக்கை-

tna-modi-0313ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதுடன் இந்திய அரசாங்கம் நின்றுவிடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சுய உரிமைகளுடனும், சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய பிரதமர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பிரிக்கப்படாத ஒரே இலங்கையில் இந்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மேலும் இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உதவும். அத்துடன் அதனடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வினை ஏற்படுத்தவும் இந்திய அரசாங்கம் செயற்படுமென தம்மிடம் உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளுக்கான பணி தொடர்பில் எதிர்ப்பு-

australiaஅவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நகர சுத்திகரிப்பு பணியாளர்களாக இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் அகதிகளுக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டமைக்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த பணிகள் அவுஸ்திரேலியர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் சிலத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாத நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்களுக்கு இவ்வாறு தொழில் வழங்க கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. எனினும் தமிழ் அகதிகளுக்கு நகர சுத்திகரிப்பு பணிகள் வழங்கப்பட்டுள்ளமையை, குயின்ஸ்லாந்தின் நகர முதல்வர் ரேய் ப்ரௌன் நியாயப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியர்கள் செய்யமறுத்த தொழில்களையை இலங்கையில் இருந்து வந்த அகதிகள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ராஜதந்திரிகளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மனித உரிமை உள்ளிட்ட விடயங்களை கருவிகளாக பயன்படுத்தி, இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான முக்கியத்துவம் குறித்து இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் விபத்தில் கர்ப்பணிப்பெண் உயிரிழப்பு, வாகனம் தீக்கிரை-

yaal vipaththil karpini pen uyirilappu (3)yaal vipaththil karpini pen uyirilappu (2)யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தை தீயிட்டு கொளுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் தேடிப்பிடித்து கைது செய்தனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் பகல் 12.45 மணியளவில் நிலைமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் நாளை-

ilankai inthiya koottukulu kootamதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இதை தடுக்க இரு நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இடையிலான கூட்டம் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி நடந்து வருகிறது. இதன்படி இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் குழுவும் நாளை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள். இவர்கள், டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில், இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசி, நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக உயர் தொழிநுட்ப உபகரணங்கள்-

siraichaalaiyin pathukaappitkuசிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உயர் தொழிநுட்பம் கொண்ட உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டுவருவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்குள் கொழும்பைச் சூழவுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த உபகரணங்களைப் பொருத்த எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் நாட்டிலுள்ள மற்றைய சிறைச்சாலைகளிலும் தேவைக் கேற்ப இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

வீட்டுக்குள் அத்துமீறிய இராணுவ வீரர் கைது-

யாழ் குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று இரவு அத்துமீறி நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இயக்கச்சி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இராணுவ வீரர், தனியாக வசித்து வரும் பெண்ணொருவரின் வீட்டிற்குள்ளேயே நேற்று நள்ளிரவு நுழைய முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், மேற்படி சிப்பாயை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மேற்படி நபர், இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் வான்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

ilankaiyil pakistanமூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, பாகிஸ்தானின் விமானப் படையின் தலைமையதிகாரி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ரபீக் பட் இன்றையதினம் இலங்கை வரவுள்ளார். வான்படை தளபதி எயார் மார்ஷல் கே.ஏ குணதிலக்கவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார். அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இரு தரப்பு உறவுகள், எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் சகோதரத்துவம் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவை மீள பெற முடியாது – இந்திய சட்டமா அதிபர்-

kachchativai meela peraகச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். கச்சதீவை மீள பெறுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், முன்னாள் முதல்வர் முத்துவோல் கருணாநிதியும் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1974ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இரு தரப்பு இணக்காப்பாட்டின் அடிப்படையில் இந்த தீவின் அதிகாரம் இல்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மீள பெற வேண்டுமென்றால் இலங்கையுடன் யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சட்டமா அதிபர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் 97 சதவீத கண்ணிவெடி அகற்றல்-

vadakku kilakkilவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் 97 சதவீதமானவை பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் ருவாண் வணிகசூரிய இதனை கூறியுள்ளார். பாதுகாப்பமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் யுத்தம் நிறைவடையும்போது 5ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் நிலகண்ணி வெடிகள் காணப்பட்டதாக அவர் கூறினார். எஞ்சியுள்ள பகுதிகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவில் பூர்த்தியாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

21 விடயங்கள் அடங்கிய பிரேரணை-

21 vidayankal adankiyaதற்போதைய தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டிய முறைமை உள்ளிட்ட 21 விடயங்கள் அடங்கிய பிரேரணை ஒன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதனை மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் 21வது தேசிய சம்மேளனத்தின் போது குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரு இந்திய இஸ்லாமியர்கள் கைது-

Arrested+xgold-285x150பாராளுமன்ற கட்டிடம் உட்பட இலங்கையின் முக்கிய இடங்கள் சிலவற்றின் புகைப்படங்களை வைத்திருந்த இரு இந்திய இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் வைத்திருந்த மடிக்கணணி மற்றும் புகைப்படக்கருவி ஆகியவற்றை சோதனை செய்த வேளை பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கும் முக்கிய கட்டிடங்களின் படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சென்னையை சேர்ந்த இருவரும் முகத்துவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமானப்படைத் தளம் தாக்குதல் புலி உறுப்பினருக்கு விளக்கமறியல்-

vimaanapadai thalamஅனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புலிகள் இயக்க உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டுள்ளது. தவரூபன் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரையே எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு செப்டெம்பர் 22ம் திகதி விடுதலைப் புலிகளால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பான அடுத்த அமர்வு-

Kilinochchiyil Kaanaamatponorகாணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதமளவில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதிமுதல் 22ம் திகதிவரையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடாபில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தவள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதிமுதல் 21ம் திகதிவரையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது.. புதிதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் எச்.டபிள்யூ குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெசோ கூட்டத்தில் இலங்கை தொடர்பில் பல தீர்மானங்கள்-

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கூட்டம் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. இதில், இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், சர்வதேச விசாரணைக்குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்கக்கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய டெசோ கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் க.அன்பழகன் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவனும் மற்றும் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், சுப்புலெட்சுமி, ஜெகதீசன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஜே.வி.பி ஆதரவாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு-

மொனராகலை படல்கும்பரவில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த குழுவினர்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். படல்கும்பர பிரதேச சபையின் தலைவர், பிரதி தலைவர் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலை மேற்கொண்டதுடன் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியதாக ஜே.வி.பி முறைப்பாடு செய்துள்ளது. பொலிஸார், பாதுகாப்பு கடமையில் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என ஜே.வி.பி மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

13 வருடங்களுக்கு முன் கொலை செய்த இலங்கையர் கைது-

சுவிஸில் தனது காதலியை கொலை செய்துவிட்டு போலி ஆவணங்களுடன் நியூசிலாந்து சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த இலங்கையரை ஒக்லண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு தனது காதலியான 23 வயதுடைய கவிதா என்பரையே குறித்த நபர் கொலை செய்துள்ளார். குறித்த சந்தேக நபரை பொலிஸார் 13 வருடங்களாக தேடி வந்த நிலையிலேயே அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸி செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற நான்கு பேர் உட்பட 6 இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திராவின் ஒன்கோல் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். சண்முகலிங்கம் (வயது 47), பர்னபாஸ் (வயது 51), இவரின் மனைவி அஞ்சலி (வயது 46), பாஸ்கர் (வயது 45) ஆகியோரே அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு படகு மூலம் அழைத்துச் சென்ற மீனவரையும், அத்துடன் இவர்களிடம் 5 இலட்சம் இந்திய ரூபாவை (இலங்கை மதிப்பில் சுமார் 12 இலட்சம் ரூபா) பெற்று சரக்கு கப்பல்மூலம் அவஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற தரகரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து விமானம்மூலம் சென்னை சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஜனாதிபதியாகும் தகுதி மகிந்தவுக்கு இல்லை- சரத்.என்.சில்வா-

இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மஹிந்த ராஜபக்ஷ் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாகவிருந்தது. எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் Read more

இலங்கைக்கு கப்பல்களை வழங்கும் ஜப்பான்-

imagesஇலங்கையின் கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புக் கப்பல்களை ஜப்பான் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பானிய பிரதமர் இது குறித்து இலங்கைக்கு அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர கடற்பாதையூடாகவே ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் செல்கின்றன. அவற்றின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தக் கண்காணிப்புக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்குக்கு காணி காவல்துறை அதிகாரம் இல்லை – எஸ் பி-

Vadakkitku kaani kavalthuraiகாவல்துறை மற்றும் காணி அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுள்ளை – பஸ்சர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பெற்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருக்கவேண்டும் எனில் வடக்கு மாகாணத்திற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வழக்கப்பட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

சுன்னாகம் கிணறுகளில் கழிவெண்ணெய் கசிவு, மாகாணசபை உறுப்பினர்கள் ஆராய்வு-

Chunnakam well 23.08.2014 (1)Chunnakam well 23.08.2014 (2)Chunnakam well 23.08.2014 (10)Chunnakam well 23.08.2014 (9)Chunnakam well 23.08.2014 (7)Chunnakam well 23.08.2014 (6)

வலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சுன்னாகம் பிரதேச கிணறுகளில் காணப்படுகின்ற கழிவு எண்ணெய்க் கசிவு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றையதினம் (23.08.2014) அப்பகுதிகளுக்குச் சென்று கிணறுகளை பரிசோதித்துள்ளனர். இதுபற்றி புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சுன்னாகத்தில் இயங்குகின்ற இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின்சார நிலைய மின்பிறப்பாக்கியில் இருந்து நிலத்திலே விடப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்திற்குள் ஊற்றுநீருடன் கலந்து சுன்னாகம் பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட 700 முதல் 800 குடும்பங்களின் கிணறுகளில் நீருடன் கழிவெண்ணெய் கலந்திருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கின்றது. பிரதேச மக்கள் அந்தத் தண்ணீரை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்லது தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சுவதற்கோ முடியாத நிலையில் உள்ளனர்.. அத்துடன் இந்த கழிவெண்ணெய் கசிவானது சுன்னாகம் மாத்திரமன்றி பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டே வருகின்றது. ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதன் முதற் கட்டமாக மக்களின் உடனடித் தேவையினை நிவர்த்திப்பதற்காக வட மாகாணசபை ஒரு தண்ணீர் பவுஸரை வழங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக மின்சார சபைக்கு எதிராக வழக்குத் தொடரவும் யோசித்திருக்கின்றது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே நேற்றையதினம் பிரதேசத்திற்கு சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இலங்கை மின்சார நிலைக்கு அல்லது சுன்னாகம் மின்சார நிலையமோ வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்படாதவையாகும். ஆகவே வடக்கு மாகாணசபை மத்திய அமைச்சருடனோ ஜனாதிபதியுடனோ தொடர்பு கொண்டுதான் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் கழிவு எண்ணெய்க்கசிவு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்-த.சித்தார்த்தன்-

1வலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சுன்னாகம் பிரதேச கிணறுகளில் காணப்படுகின்ற கழிவு எண்ணெய் பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதியுடனும் மின்சக்தி எரிசக்தி அமைச்சருடனும் வட மாகாணசபை தொடர்புகொள்ள வேண்டுமென்று புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாணசபையின் 14ஆவது அமர்வில் (21.08.2014) வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கழிவு எண்ணெய்க் கசிவு சிறிது சிறிதாக அதிகரித்து ஏழாலையிலுள்ள கிணறுகளையும் மாசடையச் செய்துள்ளது. இது தொடர்ந்து காங்கேசன்துறை வரை செல்லக்கூடிய அபாய நிலையும் தோன்றியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் தொடர்புகொண்டபோது இதன் பாதிப்பு நீண்டகாலப் பிரச்சினையாகும் என அவர்கள் எம்மிடம் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காணவேண்டியது மிகவும் அவசியமாகும். இத் தண்ணீரில் முகம்கூடக் கழுவக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றார்கள். இதனை இப்படியே விட்டால் பல இடங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. இப் பகுதியில் வீட்டுத்தேவை மட்டுமன்றி விவசாய நிலங்களும் உள்ளன. ஆகவே இதனை முக்கிய பிரச்சினையாக எடுத்து ஜனாதிபதியுடனும் மின்சார அமைச்சருடனும் இந்த மாகாணசபை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது தொடர்பில் முதலமைச்சர் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடுவதுடன் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஊடகவியலாளருக்கு விசா நிராகரிக்கப்படவில்லை- வெளிவிவகார அமைச்சு

அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான விசா நிராகரிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய காலத்திற்கு விசாவிற்கு விண்ணப்பம் செய்யுமாறு குறித்த ஊடகவியலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கார்டினர் ஹாரிஷ் என்ற ஊடகவியலாளருக்கே இலங்கைக்கான விசா வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளருக்கு தற்போது விசா வழங்குவதற்காக உரிய சந்தர்ப்பம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, அவரது விசாவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியுலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக அமெரிக்க ஊடகவியலாளரான கார்டினர் ஹாரிஷ் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய கட்சிகளையும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்-

tna-modi-03tna-modi-02தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளையும் இந்திய அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ளனர். அவர்;கள் இன்றிரவு நாடு திரும்பவுள்ளனர். இலங்கையின் அரசியல் கட்சிகளை அழைத்து இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய அரசின் திட்டத்தின் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பு இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த பின்னர், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர்தீன் செய்தியாளர்களிடம் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கூட்டமைப்பு சந்தித்த பின்னர், இந்திய அரசினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்படி எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜேபிபி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளும் இந்தியாவுக்கு அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் நாளை முதல் விநியோகம்-

ஊவா மாகாணசபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கி காப்புறுதி பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுக்கள் அடங்கி காப்புறுதி பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, தபால்மூல வாக்களிப்பு தினமான செப்டம்பர் 04ஆம் மற்றும் 05ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்களுக்கு, செப்டம்பர் 11ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி பக்கெட்டுக்களை உரிய திணைக்களங்களுக்கு, எதிர்வரும் 27ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார். வாக்களிப்பு தினமான செப்டம்பர் 4ஆம் திகதிக்கு முன்னதாக உரிய திணைக்களங்களிடம் வாக்குச்சீட்டு பொதிகள் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

வாழைச்சேனை கொலை தொடர்பில் மூன்று பெண்கள் கைது-

மட்டக்களப்பு வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை, காவத்தைமுனையைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே பொல்லால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என வாழைச்சேனை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவுடன் சீரான உறவு-

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் சீரான உறவினை பேணி வருவதாக அமெரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்கா கடுமையாக நடந்துகொள்கிறது. எனினும் அமெரிக்காவுடன் சிறந்த உறவினை பேண இலங்கை தயாராக இருக்கிறது. இவ்விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் வேறு பலத் தரப்புக்களுடனும் தாம் கலந்துரையாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் ஆணைக்குழு கிளிநொச்சியில் விசாரணை-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு அடுத்த மாதம் கிளிநொச்சியில் தமது விசாரணைகளை நடத்தவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வாக இந்த விஜயம் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் கிளிநொச்சியில் இந்த விசாரணைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் 100 கைதிகள் தப்பியோட்டம்-

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நூறு கைதிகள் வரை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை அழைத்துச் செல்லும் வேளை தப்பிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்-இந்தியா-

imagesஇலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழும் வகையிலான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் இது தொடர்பில் டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அக்பருதீன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் தெளிவாக விளக்கப்படுத்தி இருப்பதாகவம் அவர் கூறியுள்ளார். மேலும் 13ம் திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட ஐக்கியமான தீர்வு ஒன்று தொடர்பில் இந்தியா செயற்படும் என்றும் அக்பருதீன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் சந்திப்பு-

thamil thesiya koottamaippu indiaஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பினர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளனர். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா பங்களிப்பு செய்யவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கூட்டமைப்பினர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. வடகிழக்கு மக்களின் நிலை தொடர்பாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் நாங்கள் கலந்து ஆலோசித்தோம். இந்த பிரச்சினை தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை இந்திய அரசின் பார்வைக்கு முன் வைத்திருக்கிறோம். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் களநிலைமை, Read more