யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் அடுத்தமாதம் ஆரம்பம்-

railயாழ்ப்பாணத்துக்கான தொடரூந்து சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது இலங்கையில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணம் வரையான தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிதிமோசடியில் ஈடுபட்ட கனேடிய அரச சார்பற்ற நிறுவனம்-

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனடாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை, 25 லட்சம் டொலர்களை கனேடிய அரசாங்கத்துக்கு செலுத்துமாறு கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் 2004ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்னர் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த நிறுவனத்துக்கு கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஸ்த்தாபனத்தினால் வழங்கப்பட்ட நிதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கனடாவின் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு-

minnal thaakkiவவுனியா நாமல்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியான 65வயதான காலி ஸ்ரீநந்தரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளரான 49வயதுடைய ஆகியோர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடை மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின்போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம்-

chinaஇரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் கற்பிட்டி, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவெளியில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்களால் பதற்றம்-

nilaveliyilதிருகோணமலை நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 5 வீடுகளுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம்;நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டதை அடுத்து அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.