Header image alt text

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்-

Oodaka suthanthiraththai valiyuruththi (2) Oodaka suthanthiraththai valiyuruththi (3)ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசாங்கத்தின் சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாh, சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இராணுவ பஸ் விபத்தில் சிக்கியதில் 17 பேர் காயம்-

iraanuva bus vipaththuதிருகோணமலையில் இருந்து அளுத்கம நோக்கி விசேட அதிரடிப் படைவீரர்கள் பயணித்த பஸ் 91ஆவது கட்டைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை முகாமில் இருந்து அளுத்கம நகருக்கு விசேட பணிகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 8 மணியளவில் கொள்கலன் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேற்படி விபத்தில் காயமடைந்த இராணுவத்தினர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து-

அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்துக்களை பெறும் ஆய்வொன்றை பெப்ரல் அமைப்பு ஆரம்பித்துள்ளது. சமூகத்தின் பலவித தரப்பினர் மத்தியிலிருந்தும் பெறப்படும் கருத்துக்களை உள்ளடக்கி அறிக்கையொன்றை தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தயாரிக்கப்படும் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை வெட்டி கொலை செய்தவர், தானும் தற்கொலை-

manaiviyai veddi kolai seithavarவவுனியா, மாகாரம்பைக்குளம் பகுதியில் மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தானும் தற்கொலை செய்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது மனைவியான அமுதாவை (வயது-38) வெட்டிப் படுகொலை செய்துள்ளார். தொடர்ந்து தனது மாமி மற்றும் மாமாவையும் கோடரியால் தாக்கிவிட்டு. மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் சாவுக்கும் குடும்பத்தகராரே காரணமென வவுனியா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஊனமுற்ற படையாலும் 18 கோடி ரூபா வருமானம்-

Oonamutrai padaiyaalumபோரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மூலம் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 18 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாக பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதன் கராணமாக விசேட தேவையுடையோராக மாற்றப்பட்ட 1500 இராணுவத்தினர் யக்கலையில் இயங்கும் ஆடைத் தயாரிப்பு நிலையத்தில் இராணுவ சீருடைகளைத் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் இராணுவ சீருடைகள் கொள்வனவு செய்ய வருடாந்தம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் 18 கோடி ரூபா சேமிக்கப்படுகிறது. இங்கு ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் பாதுகாப்பு படையினருக்குத் தேவையான சீருடைகளில் 60 சதவீதமானவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளது.

மாகாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-

maakaana kaiththolil kankaatshiவடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்றுகாலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இக் கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்கள், மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள், சிற்பியிலான கைப்பணிப் பொருட்கள், பனை தெங்குசார் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் இக்கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. மேலும் இந்நிகழவில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இறுதி யுத்தத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை திரட்ட நடவடிக்கை-

imagesCAI4FZBSஇறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகளை காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளிலிருந்து இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஒரு கட்டமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் புல்மோட்டை வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாஸ கூறியுள்ளார். இதன்போது யுத்தத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் ஆணைக்குழு கூடியபோது மக்கள் அளித்த சாட்சியங்களுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும், எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வுகள் மன்னார் மாவட்டத்தில் அடுத்தமாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமேற்கில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு-

 valimetkil pulaimai parisil pareetsaikku (3) valimetkil pulaimai parisil pareetsaikku (4) valimetkil pulaimai parisil pareetsaikku (2) valimetkil pulaimai parisil pareetsaikku (6) valimetkil pulaimai parisil pareetsaikku (7) valimetkil pulaimai parisil pareetsaikku (8) valimetkil pulaimai parisil pareetsaikku (9)

யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச 2014 புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டில் கடந்த 26.07.2014 சனிக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் புலமைச் சுடர் மற்றும் ஒளியரசி மாதாந்த சஞ்சிகையினரால் நடாத்தப்பட்டது. இவ் நிகழ்வானது யாழ்ப்பாணக் கல்லூரி ஒட்டலி மண்டபத்தில் கல்லூரி அதிபர் வண கலாநிதி டி.சொலமன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உதயன் குழும பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், புலமைச் சுடர் ஆசிரியர் ஜனதன், மாணிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் திரு ஜெபநேசன் மற்றும் வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் 1000த்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய படகு கொள்வனவு-

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையை தவிர்ப்பதற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடிய 60 இலட்சம் ரூபா பெறுமதியான படகு ஒன்றை இராமேஸ்வரம் மீனவர்கள் கொள்வனவு செய்துள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே ஏற்கனவே இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தன. இதன்போது இந்திய மீனவர்கள் இழுவை முறையிலான மீன்பிடியை காலக் கிரமத்தில் கைவிடவேண்டும் என இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் எவ்வாறாயினும் தமிழக மீனவர்கள் இழுவை மீன்பிடி தொழிலை கைவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான இராமேஸ்வரம் மீனவர்களின் இந்த முயற்சி இலங்கை கடற்பரப்பிற்குள் அவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி தமிழகத்தில் மீனவர்கள் சிலர் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி-

சுகாதார ஊழியர்கள் சிலர் கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாடடப் பேரணியால் கொழும்பு நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தேசிய வைத்தியசாலை அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக அலரிமாளிகை வரை முன்னெடுக்கப்பட்டது. சம்பள முரண்பாட்டினை நீக்குமாறும், நிலுவை சம்பளத்தை வழங்குமாறும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர். இந்த பணி பகிஷ்கரிப்பிற்கு இணையாக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவின் இணை ஏற்பாட்டாளர் தீபிகா விஜேசூரிய தெரிவித்துள்ளார். 27 பிரிவுகளைச் சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள சுகாதார ஊழியர்களில், நோயாளர் விடுதி எழுதுவினைஞர், உணவு கண்காணிப்பாளர், தொலைபேசி இயக்குனர், மின் தூக்கி இயக்குனர், உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஊழியர்கள் அடங்குகின்றனர். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக வலி மேற்கு தவிசாளரின் ஏற்பாட்டில் விசேட பூஜை-

uyarthara vakuppu maanavarkalukku (3)uyarthara vakuppu maanavarkalukku (2)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 25.07.2014ம் வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் 2014 உயர்தர மாணவர்களின் பரீட்சை வெற்றி வேண்டி சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை ஒழுங்கு செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வில் மாணவர்களது உயர்தர பரீட்சைக்குரிய அனுமதி அட்டை மற்றும் எழுது கருவிகள் பூஜை நிகழ்வில் வைக்கப்பட்டு ஆசீர்வாதத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு கையேற்பு ஆரம்பம்-

ஊவா மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலாளர் அலுவலங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இன்றையதினம் முதல் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்படவுள்ளன. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து அறிவிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றுமுற்பகல் 1.30மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஊவா மாகாண தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பின் போது ஏற்படும் பிரச்சினைகள், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. வேட்புமனு கையளிப்பின் பின்னர், சில கட்சிகள் போக்குவரத்து தடங்கல் ஏற்படும் வகையில் பேரணிகளை நடத்துவது குறித்து இதன்போது விஷேட அவதானம் செலுத்தப்படட்டதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கையரை இனங் காண விஷேட நடவடிக்கை –

பிரட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை இனங் காணும் விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கான சலுகைகளும் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களை இனங் கண்டு, அவர்களை நாடு கடத்தவுள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் எச்சரித்துள்ளார்.

வலி மேற்கு தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

vali metku thavisaalarin pajanai (1)vali metku thavisaalarin pajanai (3)vali metku thavisaalarin pajanai (4)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது பஜனைப் பாடசாலைத் திட்டம் கடந்த 25.07.2014 வெள்ளிக்கிழமை அன்று சங்கரத்தை துணைவிப்பகுதி பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் தவிசாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தவிசாளரிடமிருந்து இந்து சமயம் சார்ந்த நூல்களை பெற்றுக் கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியான பஸ்கள்-

இலங்கை போக்குவரத்து சபையானது மாற்றுத் திறனாளிகளுக்காக சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்தச் சேவைகள் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சேவையானது கொழும்பிலிருந்து மொரட்டுவை, கெஸ்பாவ, ஹோமாகம, மஹரகம, மாலபே, கடுவலை, களனி, ஜா- எல மற்றும் கிரிபத்கொட ஆகிய இடங்களுக்கு நடத்தப்படும். இதேவேளை இலங்கைக்கு 2500 புதிய பயணிகள் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதேநேரம் 10- 15 வருடகால சேவையிலுள்ள பஸ்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை (பிபிசி)

untitledஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, அதனை இலங்கை காவல்துறையினரும், இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை யாழ் திரையரங்கு ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.

சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரமணா என்றழைக்கப்படுகின்ற சத்தியநாதன் ரமணதாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார். Read more

டெக்ஸாஸூக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர் உள்ளிட்ட குழு கைது-

illegal_immigrants_001இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் சிலர் மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் நகருக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுல் பங்களாதேஷ் மற்றும் நேபாளப் பிரஜைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. ரியோ கிரான்டே கங்கையின் ஊடாகவே இக்குழு டெக்ஸாஸுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளது.

விமல் வீரவங்சவின் கட்சி தனித்துப்போட்டி-

வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரசங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத்தேர்தலில், தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைக்கும்போது அமைச்சர் விமல் இதனைக் கூறியுள்ளார். இதற்கமைய பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தேசிய சுதந்திர முன்னணி தனியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முதல் ஓகஸ்ட் 6ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 50 பேர் யாழில் கைது-

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 50பேரை யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் இன்று அதிகாலை கைதுசெய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். மேற்படி மீனவர்களை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்களின் 02 நாட்டுபுறப் படகுகள் உட்பட 07 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைதானோரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுடன் பொதுபல சேனாவுக்கு தொடர்பு – அமெரிக்கா-

பொதுபலசேனா அமைப்புக்கு தற்போதைய அரசுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளனது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட 2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சிறுபான்மை ஆகமங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், ஆகமத்தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுபல சேனா அமைப்பு மற்றும் ராவண பலாய அமைப்பு எப்பவை பற்றியும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் வலுக்கட்டாயமாக ஆகமங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாகவும், அதனை சாதாரண மக்கள் எதிர்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்-

vavuniya_student_002யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையே இன்று முற்பகல் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த ஒரு மாணவி உட்பட மூன்று மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மனித உரிமை குறித்த அரச செயற்பாட்டில் திருப்தியில்லை-

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் குறித்து திருப்திப்பட முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் சில குறிப்பிடத்தக்க வகையில் இருப்பினும் அநாவசிய செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக அவ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இச் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு உதவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களே அதிகம் – ஸ்கொட் மொரிசன்-

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர், படகில் பயணித்த இந்தியப் பிரஜைகளை மீளவும் அழைத்துக்கொள்ள இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது, இந்தப் படகில் பயணித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த இலங்கையர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது இந்நிலையில் ஆபத்துக்கள் காரணமாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரவில்i. இவர்கள் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் மன்னாரில்அடுத்த கட்ட விசாரணை-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அடுத்த அமர்வுகளை மன்னாரில் நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 8ஆம், 9ஆம் திகதிகளில் மாந்தை மேற்கிலும், 10ஆம் திகதி மன்னாரிலும், 11ஆம் திகதி மடுவிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்த ஆணைக்குழுவானது முதற்தடவையாக மன்னாரில் அமர்வுகளை நடத்தி மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. சுயாதீனமான நேரடி உள்ளக விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எண்ணியுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் சாட்சியமளிக்க எரிக்சோல்ஹெய்ம் தயார்-

இலங்கை அரசு அமைத்துள்ள ஆணைக்குழு முன்பாகவும் சாட்சியமளிக்கத் தயாராகவே இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். ‘என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவற்றை யார் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அந்த விசாரணைக்குழு முன்பாகச் சாட்சியமளிப்பதற்குத் தயார் என எரிக் சொல்ஹெய்ம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை அரசு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகளை விரிவுபடுத்தியதுடன், அதற்கு ஆலோசனை வழங்க வென சர்வதேச நிபுணர்கள் மூவரை நியமித்தது. அதையடுத்தே எரிக் சொல்யஹய்ம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமற்போதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளில், தேவை ஏற்படின் என்னால் பங்களிப்புச் செய்ய முடியும்” என்று சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி ஒருபோதும் வெற்றியளிக்காது-இரா.சம்பந்தன்-

untitledஅரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து, துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பிலும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. கூட்டமைப்பைப் பிளவுபடுத்த வேண்டுமென்பதில் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை. தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு புரட்டாசி மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பேராளர் மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேராளர்கள் ஒன்றுகூடுவார்கள். இவர்கள் ஒன்றுகூடி ஏகமனதான தீர்மானங்களை மேற்கொள்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகக் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். அந்த வகையில், எனது பொறுப்புக்களை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன். அது தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பேராளர்கள் ஒன்று கூடி இணக்கமான முடிவுக்கு வருவார்கள். இதன்மூலம் ஒருபோதும் பிளவுபடவோ, பிரச்சினைகள் எழவோ இடமில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமிழர்களின் ஈடேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்ற ஒன்றாகவே அமையும். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அது தொடர்பில் சாதகமாகப் பரீசிலிக்கப்படும். எப்படியாவது கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று அரசு கங்கணம் கட்டி செயற்படுவதையே காண முடிகின்றது. அதற்கு கட்சியோ தமிழ் மக்களோ ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

படகு நடுக்கடலில் தடுக்கப்பட்டமை குறித்து ஆஸி பிரதமர் விளக்கம்-

australiaஅகதிகள் வருகையை தடுக்கும் வகையிலே, 157 பேரை ஏற்றிய இலங்கை அகதிகள் படகு, நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி எபோட் தெரிவித்துள்ளார். தென்னிந்திய கடற்பரப்பில் இருந்து கடந்த மாதம் அவுஸ்திரேலிய சென்றிருந்த அகதிகளை ஏற்றிய படகு காரணமாக அவுஸ்திரேலியா மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ள அகதிகள் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு இடம் வழங்க போவதில்லை என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். இந்தியாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, படகிலுள்ள 157 பேரையும் அவுஸ்திரேலியா கொண்டுவர இணக்கம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அவர்களை இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும். அந்த நடவடிக்கைகள் இடம்பெறும்வரை அவர்கள் ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் கொள்கையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி-

tamilசர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள் தொடர்பிலும் கற்பிக்கப்படும் எனவும் இது தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்;.

திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி-

திருகோணமலை, பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று கைமுந்தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது நீரினுள் முழ்கி மரணமடைந்துள்ளனர். பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்விபயிலும் டேவிட் ஜெயசீலன் மற்றும் தங்கபுரம் ஸ்ரீகணேச வித்தியலாயத்தில் 4ஆம் தரத்தில் பயிலும் இலட்சுமணன் யசுர்சனன் ஆகியவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். இம் மாணவர்கள் இருவரும் விடுமுறையை சந்தோசமாக கழிப்பதற்கு நீராடுவதற்காக குளத்திற்கு சென்றிருந்தார்கள் என இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம்-

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் விசாரணைக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில புலம்பெயர் தமிழர்களும் சாட்சியம் அளிக்க முடியும் எனவும் எனினும், புலம்பெயர் மக்களின் சாட்சி விசாரணைகளுக்கான அமர்வுகள் தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாட்சி விசாரணை அமர்வுகளில் 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீள்குடியேற்றத்தில் உதவக்கோரி சம்பூர் மக்கள் மனு-

meel kudiyetraththil uthavakkoriதிருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் பொருளாதார முதலீட்டு வலயத்திற்கு என அடையாளம் காணப்பட்ட காணிகள் தவிர ஏனைய காணிகளில் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு சம்பூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா ஊடாக ஜனாதிபதிக்கு இந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்களுக்கு மேலாக தீர்வு இன்றி தொடரும் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி உதவ வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு போர் காரணமாக தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள் போர் முடிவடைந்த பின்னரும் மீள்குடியேற்றம் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்கள் உட்பட தற்காலிக குடியிருப்புகளிலே தங்கியுள்ளார்கள். சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட காலந்தொட்டே இவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் சாதகமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்வரை யாழ்தேவியை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை-

யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். யாழ். வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் செப்ரெம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். செப்ரெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

157 இலங்கை அகதிகளை நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸி முடிவு-

157 ilankai akathikalaiபடகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், அவுஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படும் இந்த 157 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் வந்து சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்க்கும்வரை அவுஸ்திரேலிய மண்ணில் வைக்கப்படும் இவர்களை, அதன் பின்னர் எவ்விதமாக கையாள வேண்டும் என்பதை தமது கொள்கையின் அடிப்படையிலும் சட்டங்களின் அடிப்படையிலும் அவுஸ்திரேலியா முடிவுசெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட் மாரிசன் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அங்கு இந்திய அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார். இந்தப் படகில் வந்தவர்களில் யார் யார் இந்தியப் பிரஜைகள் என்று உறுதிசெய்யும் பொருட்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களைச் சந்திக்கப்பதற்கு அனுமதி வழங்க தான் சம்மதித்திருந்ததாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் கூறியுள்ளார்.

பொது பல சேனாவின் முகநூல் கணக்கை முடக்கவும் ; 50 லட்சம் முறைப்பாடுகள்-

கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முகநூல் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஸ்ட தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்கை முடக்குமாறு அமெரிக்காவில் அமைந்துள்ள முகநூல் நிறுவனத்திடம், 12 லட்சம் முறைப்பாடுகள் 24 மணித்தியாலத்திற்குள் செய்யப்பட்டுள்ளன. குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் காணப்படுவதனால் கணக்கை முடக்குவதாக முகநூல் நிர்வாகம் ஞானசார தேரருக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் தனது முகப் புத்தகத்தில் பதிவேற்றப்படவில்லை என ஞானசார தேரர் கூறியிருந்தார்.

வடக்கிலிருந்து வந்த ஊடகவியலளார்கள் தடுத்துவைத்து விடுவிப்பு-

yaal oodakaviyalaalalarkal (3)yaal oodakaviyalaalarkal (4)கொழும்பில், இடம்பெறும் இருநாள் ஊடக பயிற்சிக்காக வடக்கிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள், ஓமந்தை பொலிஸாரால் 6 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதியை மறித்து, ஊடகவியலார்களின் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் பயணித்த வாகனத்தில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர், இரு வாகனங்களில் நேற்றிரவு கொழும்பை நோக்கி பயணித்துள்ளனர். முதலாவது வாகனம் வவுனியாவை கடந்து சென்ற நிலையில், இரண்டாவதாக வந்த வாகனம் மாங்குளம் பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வழி மறிக்கப்பட்டு இராணுவ பொலிஸாரினாலும் சிவில் உடையில் இருந்தவர்களினாலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணத்தை தொடர்வதற்கு அந்த வாகனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் இரவு 9.30 மணியளவில் வாகன பதிவுகளை மேற்கொள்வதற்காக சாரதி, வாகனத்தை பதியும் இடத்திற்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில், அங்கு வந்த இராணுவத்தினர் அறுவர், சாரதியின் ஆசனத்திற்கு கீழ் சிறிய சிகரெட் பெட்டியில் கஞ்சா இருப்பதாக தெரிவித்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் மூவர், சாரதியையும் அதில் பயணித்த எஸ்.நிதர்சன், வி. கஜீபன், எஸ். சொரூபன், கே.கம்சன், எஸ்.பாஸ்கரன், மயூரபிரியன் மற்றும் கெனடி நியூமன் ஆகிய ஊடகவியலாளர்களையும் ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள பொலிஸ் காவலரனில் தடுத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஊடகவியலாளர்கள், Read more

ஒன்றுபட்டு பொது வேலைத்திட்டத்தின்கீழ் முன்னேறிச் செல்வதே இறந்தவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்-ஜி.ரி.லிங்கநாதன்-

20140716_094140நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் உடனடியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி முன்னேறிச் செல்வதுவே நாம் இறந்தவர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய நன்றிக்கடனாகவும், அஞ்சலியாகவும் இருக்கும் என புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியாவின் முன்னைநாள் நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 16.07.2014 புதன்கிழமை அன்று புளொட்டின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ஆம் திகதியிலிருந்து எமது மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான 16ஆம் தி;கதிவரையில் வீரமக்கள் தினமாக நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம். இற்றைக்கு 25ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட்டுப் பிரிந்த எங்களுடைய செயலதிபர் மற்றும் அமரர் அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய இயக்கத் தலைவர்களான பத்மநாபா, சிறீ சபாரட்ணம், தங்கத்துரை, அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், அனைத்தியக்க போராளிகள் மற்றும் பொதுமக்களின் இழப்புக்களுக்கு மத்தியிலும் எங்களுடைய மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வையோ அல்லது ஒரு அமைதியான வாழ்வினையோ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் இன்றைக்கு நாங்கள் இருக்கின்றோம் Read more

ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள்!-

aatchiyaalarkale inavaathaththai (1)ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதீர்கள் என தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் வவுனியா நகர்ப் பகுதியில் இன்று கையெழுத்து இடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து இனவாதங்களையும் தோற்கடிப்போம், இனவாத, மதவாத வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தை அழுல்படுத்து, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சோசலிசம் எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதேவேளை நகர்ப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பதாதையொன்றில் பொதுமக்கள் கையெழுத்து இட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டடிருந்தனர்.

யாழில் பாலியல் வன்முறைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்-

yaalilyaalil2)yaalil 3பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டித்து யாழ் நீதிமன்றத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்றினை பெண்கள் செயற்பாட்டு இயக்கத்தினர் இன்றுகாலை 10 மணியளவில் மேற்கொண்டனர். யாழ். மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் கடற்படையால் சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கு இன்று யாழ் சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனையடுத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ‘பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்’, ‘சட்ட அமுலாக்கம் எங்கே அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே?’ பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும்படி நீதி கோருகிறோம்., ‘நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா? உள்ளிட்ட பல்வேறு வாசங்களை தாங்கியவாறு அவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐநா மனித வள அபிவிருத்தி தரப்படுத்தலில் இலங்கைக்கு 75ஆம் இடம்-

மனித வள அபிவிருத்தி சுட்டெண் வரிசையில் இலங்கைக்கு 73வது இடம் கிடைத்துள்ளது. எனினும் இந்தியாவுக்கு 135ஆவது இடமே கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த முன்னிடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை 73ஆம் இடத்தில் இருந்தது. பாகிஸ்தானுக்கு 146ஆவது இடமும் பூட்டானுக்கு 136ஆவது இடமும், பங்களாதேஸுக்கு 142ஆவது இடமும் கிடைத்துள்ளன. டோக்கியோவில் வெளியிடப்பட்ட இந்த சுட்டெண்ணின் அடிப்படையில் கல்வி தரம், வருமானம் போன்றவை கணிப்பிடப்பட்டுள்ளன. 187 நாடுகளை மையப்படுத்தியுள்ள இந்த சுட்டெண்ணில் முதல் 5 இடங்களையும் நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

புளொட் தலைவர், சுவிஸ்வாழ் தமிழ்மக்களுடன் கலந்துரையாடல்..!

DSC03462புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.  இக்கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களுடன் புளொட்டின் ஜெர்மன் கிளை அமைப்பாளர் திரு ஜெகநாதன், லண்டன் நியூ காம் நகரசபையின் கவுன்சிலரும், உதவி மேயருமான திரு போல் சத்தியநேசன், புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர் சுவிஸ்ரஞ்சன், ஆகியோரும் முன்னிலை வகித்திருந்தனர்.

 (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Read more

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி-

UNPஅரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டார். ரகசிய காவல்துறையினருடாக அரச சார்பற்ற நிறுவனங்களில் விபரங்களை பெற்றுகொள்ள முற்பட்டதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் அரச பாதுகாப்பிற்கு அவர்களால் எவ்வாறு பதிப்ப ஏற்படும் என்றும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் டி எம் ஜயரத்ன, இவர்கள் நாட்டை சீர் குலைக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கு ஒரு போதும் இடமிளிக்க கூடாது எனவும் பிதமர் குறிப்பிட்டார்.

வவுனியா பெரியகோமரசன்குளம் பகுதியில் கிறிஸ்தவ சிலைகள் உடைப்பு-

vavuniyaவவுனியா பெரியகோமரசன்குளம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி மலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வாரி திருத்தலத்தின் சிலைகள் நேற்றிரவு விசமிகள் சிலரால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வாரி திருத்தலத்தில் 15 தொகுதிகளாக சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் எட்டு சிலைகளே விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யூதர்களின் சிலைகளே அதிகமாக உடைக்கப்பட்டுள்ளதுடன், மாதாவின் உருவச்சிலையின் கை ஒன்றும் உடைக்கபட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை குழு மோதலில் ஏழு பேர் படுகாயம்-

யாழ். இளவாலை வசந்தபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் காயமடைந்த ஏழுபேர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வசந்தபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (32வயது), மகேந்திரன் அசோக்குமார் (30வயது), மகேந்திரன் இராஜ்குமார் (28வயது), மார்க்கண்டு கருணானந்தன் (21வயது), ஆனந்தராசா கபிலன் (23வயது), பூதப்பிள்ளை சுரேஸ்குமார் (31வயது), இந்திரஜித் தவனேசன் (32வயது) ஆகிய 7 பேருமே படுகாயமடைந்துள்ளனர். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தினைத் தொடர்ந்து, வசந்தபுரத்தில் இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.