Header image alt text

சுவிஸ் சூரிச்சில் ‘புளொட்’டின் 25ஆவது வீரமக்கள் தினம்..!!            

(படங்களுடன் செய்தி)

plote.uma-v.m.tதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில் கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அவரது பாரியார் திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் திரு.திருமதி விஜயநாதன் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தியும், குழந்தைகளினால் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் திருமதி மீனா சித்தார்த்தன். ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சுவிஸ்கிளை சார்பில் தோழர் செந்தா, தோழர் ராஜன்; புளொட் சுவிஸ்கிளை சார்பில் புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் தீபன். லண்டன் கிளையின் சார்பில் தோழர் வவா. ஜெர்மன் கிளையின் சார்பில் தோழர்கள் அப்பன், ஜூட், நோர்வே கிளையின் சார்பில் தோழர் ராஜன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க. வரவேற்புரையினை புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்த ” வீரமக்களின் ” உருவப்படங்களுக்கு கலந்து கொண்டவர்களினால் ‘மலரஞ்சலி’ செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் தீபனின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவர் தனது தலைமையுரையில் ‘புளொட்’ அமைப்பினர் வருடாவருடம் வீரமக்கள் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம். காரணங்களை விளக்கிக் கூறியதுடன் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

முதலில் வரவேற்பு நடனம் இடம்பெற்று தொடர்ந்து திரு.விவேகானந்தன் மாஸ்டர் தலைமையில் பட்டிமன்றமும் அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள். நாட்டிய நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன. நாட்டிய நடனங்களை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவிஸ் சூரிச் தமிழ் சங்கத்தின் சார்பில் திரு.ரட்ணகுமார், சூரிச் சயன்ஸ் அக்கடமி சார்பில் திரு.கணபதிப்பிள்ளை மாஸ்டர், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சுவிஸ் கிளையின் சார்பில் பங்கேற்றிருந்த திரு.சுதா, நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த தோழர் ராஜன் ஆகியோர் உரை நிகழ்தினார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சுவிஸ் கிளையின் சார்பில் பங்கேற்றிருந்த திரு.சுதாஇ ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணி பொதுச்செயலர் சுகு தோழர் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை வாசித்ததுடன், நமது ஒற்றுமையினை வலியுறுத்திப் பேசினார்.

அத்துடன் சூரிச் சயன்ஸ் அக்கடமி சார்பில் திரு.கணபதிப்பிள்ளை மாஸ்டர் அவர்கள் தனதுரையில் ‘தாங்கள் இதுவரை காலமும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மிகவும் பயந்த சூழ்நிலையில் இருந்ததைக் குறிப்பிட்டு இப்போது நல்லதொரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடரவேண்டும். எமது ஒற்றுமை வலுப்பெற வேண்டும்’ என்றார்.

சுவிஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் திரு.ரட்ணகுமார் அவர்கள் தனதுரையில் ‘ஆரம்ப காலம்முதல் வீரமக்கள் தினத்திற்கான தமது முதலாவது போஸ்டரில் தொடங்கி இன்று 25வருடங்களாக ஒற்றுமையை வலியுறுத்தி அதற்காக செயற்பட்டு வருவது புளொட் அமைப்பே என்றும் அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்’ என்றும் குறிப்பிட்டதுடன் அதுபோல் நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பிரதம விருந்திராக கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றினார்.

 புளொட் தலைவர் தனதுரையில்

“கடந்த 25வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த அரசியல் தலைவருமான அமிர்அண்ணர் (அமிர்தலிங்கம்) அவர்கள் இறந்த நாள் தொடக்கம் எமது தலைவர் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்த நாள் வரையான காலப்பகுதியை ‘வீரமக்கள் தின’மாக கடந்த 25 வருடங்களாக நினைவுகூர்ந்து வருகின்றோம்.

இன விடுதலைக்கான போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அனைவரையும் நினைவு கூருவதென்பது அவர்கள் முன்னெடுத்த இன விடுதலை கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து இலக்கினை அடைய நாங்கள் உறுதியுடனிருப்பதையே  குறித்து நிற்கின்றது. 

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டம் முகிழ் கொண்ட காலங்களிலிருந்த சர்வதேச அரசியல் ஒழுங்கானது விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையிலும் சாதகமானதாக இருந்தது. எமது இலட்சியத்தை அடைவதற்கான தந்திரோபாயங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவானதும் சாதகமானதுமான நிலைப்பாடுகள் இருந்தன. விரும்பியோ, விரும்பாமலோ பிராந்திய அரசியல் தேவைகளும் எமது போராட்டத்தினை கூர்மைப்படுத்துவதாகவே இருந்தது. அத்துடன் சர்வதேசத்தின் தேவைகளை எமக்கு சாதகமாக பாவிக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் அன்றிருந்தது.

பின்னர் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறத் தொடங்கும்போது அதற்கேற்ப எமது விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ள நாம் தவறி விட்டோம். இதுவே எமது இன்றைய நிலைக்கு காரணமென எனது பார்வைக்கு புலப்படுகின்றது.

மாறுபடும் சர்வதேச ஒழுங்குகளை கவனத்திலெடுத்து அதற்கொப்ப எமது போராட்ட வடிவங்களையும், அணுகுமுறைகளையும் நாம் மாற்றியிருந்திருக்க வேண்டும். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்ஸின் கூற்றுக்கேற்ப நாமும் மாற்றங்களுக்கு உட்பட்டு எமது திசைவழிகளை மாற்றி இலக்கிற்கான பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

அதேபோல் எமது போராட்டத்திற்கு மிக முக்கிய பின்னடைவாக அமைந்தது எமக்குள் ஒன்றுமையின்மையே என்பதும் மறுதலிக்க முடியாதது. ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெறும் சமூகத்தில் ஆயுதமேந்திய போராட்ட குழுக்கள் தமக்கிடையே ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்க்க முற்பட்டதும்இ அதன் விளைவுகளும் குறித்து நான் இங்குள்ள எமது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

 ‘ஏகம்’ என்ற சிந்தனையில் உருவான சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்கவே நாம் போராட முற்பட்டோம். அதே ‘ஏகம்’ என்ற சிந்தனை எம் ஒவ்வொருவருக்குள்ளும் குடிகொண்டது. அது எமது சிந்தனைக்குள் வரத் தொடங்கிய காலத்திலிருந்தே எம்மையுமறியாமல் நாம் ‘ஜனநாயக விரோதி’களாகி விடுகிறோம். இது வெறும் ஆயுத போராட்ட தலைமைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தும். இதனை நான் கூறுவதற்கு அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லையென்றே கருதுகின்றேன்.

 எமது தவறுகளை நாமே உணர்ந்து சரியான பாதையில் பயணிக்காவிடின் இப்போது உள்ள சோக வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தலைமைகள் விடும் தவறுகளே அந்த சமூகத்தை இழி நிலைக்குள் தள்ளி விடுகின்றது.

 எது எவ்வாறாயினும்இ பல கோணங்களிலே நின்ற நாங்கள் அனைவரும்; 2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரு அணியாக ஒற்றுமைப்பட்டுள்ளோம்.

 தம்பி பிரபாகரன் தன்னுடைய தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம் அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவேயாகும்.

பிரபாகரன் தமிழீழத்தை ஒருபோதும் கைவிட மாட்டார் புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என தொடர்ந்து வந்த அரசுகள் கூறிவந்ததை நம்பிய சர்வதேசம் -முக்கியமாக எங்களுடைய பிரச்சினையில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளான இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள்- இறுதியுத்தத்தின் போது அரசிற்கு மிகப்பெரிய அளவிலே ஆதரவைக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் என்றுமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வர மாட்டார்கள் எனக் கருதியே சர்வதேசம் யுத்ததிற்கு துணை புரிந்தது. இன்று இதுகுறித்து அவர்கள் எங்களுடன் அளவளாவும் போது அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்ற ஒரு மனத்தாங்கலை வெளிப்படுத்துவதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இன்று சர்வதேச நாடுகள் அனைத்தும் யுத்த காலத்தில்கூட இல்லாத அளவிற்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அதிக கரிசனை கொள்கின்றன. அது எங்களுடைய ஒற்றுமையின் விளைவுதான் என்பதில் சந்தேகமில்லை. எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும்இ வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது.

சர்வதேசத்திலே வாழுகின்ற பல தமிழ் அமைப்புகளும்இ புலம்பெயர் தமிழர்களும் காட்டிய அக்கறையும்இ அவர்களுடைய செயற்பாடுகளும் இந்த ஜெனீவா தீர்மானம் மாத்திரமல்ல சர்வதேசமும் எங்கள்மேல் அக்கறை எடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது என்பது யாவருமறிந்ததே. தொடர்ந்தும் புலம்பெயர் மக்கள்இ தமிழ் மக்களுடைய ஒரு நியாயமான தீர்வுக்காக தங்களுடைய அர்ப்பணிப்புகக்ளை செய்ய வேண்டும்.

போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன விடுதலைக்காக வழங்கிய தார்மீகஇ பொருளாதார ஆதரவுகள் காலத்தால் அழியாதன. அவர்களின் அந்த பலம் இல்லாமல் போராட்ட வரலாறு இவ்வளவு நீண்டிருக்க முடியாது. இவையாவும் வீணாகி விட்டதேயென நாம் சோர்ந்து விடவோ அல்லது துக்கித்துக் கொண்டோ இருந்துவிட தேவையில்லை.

மாறாக தாயகத்தில் நலிந்து போயுள்ள எமது உறவுகளுக்கு தங்களாலான பொருளாதாரஇ மனோபலங்களை வழங்கி அவர்களையும் வருங்கால எமது சந்ததியினரையும் வளமானஇ அறிவார்த்தமானவர்களாக உருவாக்க வேண்டும். இதனூடாக எமது இனத்தின் இருப்பை மீண்டும் வலுவானதாக்க வேண்டும்.

 பெருமளவிளான எமது உறவுகள் புலம்பெயர்ந்த நிலையில் தாயகத்தில் நாம் சகல வகைகளிலும் பலமற்றவர்களாக்கப்பட்டுள்ளோம். இந்நிலையை மாற்ற புலம்பெயர் சமூகம் உதவுகின்றது. அது இன்னும் பெரிய அளவில் உதவ வேண்டும். அவ்வாறு உதவிகளை வழங்கி இந்த மக்களை வாழவைக்க வேண்டும். முக்கியமாக கல்வி மேம்பாட்டுக்காக தங்களுடைய உதவிகளை பாரிய அளவில் தொடர வேண்டும். இவ்வாறு புலம்பெயர் சமூகம் உதவுவதன் மூலம் தான் தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் பலம் பொருந்திய சமூகமாக உருவாக்க முடியுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

 ஒற்றுமை ஒன்றே இன்று எமது பலமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளில் நாம் மென்மேலும் பலப்பட்டு  ஒற்றுமையாக எமது உரிமைகளுக்காக ஒரே குரலில் ஓங்கியொலிக்க வேண்டும். மக்களின் உண்மையான விடுதலையை வென்றெடுப்பதே தமது இன்னுயிரையீந்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம். வரலாறு எம் மக்களின் வாழ்வை மீட்டுத் தரும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளில் பங்குபற்றியிருந்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் விசேட பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியோர் மற்றும் பல வழிகளிலும் உதவிகளை வழங்கிய அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். பரிசில்களை வழங்கும் நிகழ்வு தோழர் மனோ, தோழர் சிவா ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அனைவருக்கமான பரிசில்களை கழகத்தின் தலைவர் திரு த.சித்தார்த்தன் அவர்கள் வழங்கிவைத்தார்.

தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் சார்பில் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய சுவிஸ்ரஞ்சன் அவர்கள் நன்றியுரை யாற்றுகையில்… 

நடனம் மற்றும் நாட்டியங்களை ஒழுங்கு செய்து தந்த திருமதி ஜெயவாணி குகராஜசர்மா நடனம் மற்றும் நாட்டியங்கள் உட்பட அனைத்து கலைநிகழ்வுகளையும் அளித்த மாணவ மாணவிகளுக்கும்   பட்டிமன்றங்களை தலைமை தாங்கி நடாத்திய திரு விவேகாநந்தன் மாஸ்டர் மற்றும் திரு. பற்றிக்இ திரு மயூரன்இ திரு பொலிகை ஜெயாஇ திரு. செல்வராஜா மாஸ்டர்இ திரு. சிவசோதிலிங்கம்இ திரு சண்முகராஜா..

அத்துடன் பரீட்சைக்கு தலைமை தாங்கியது முதற்கொண்டு  நடுவர்களாகவும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்தவர்கள் கலை நிகழ்ச்சிகளில் சரீர உதவி, நிதியுதவி போட்டோ உதவிகள் என பல்வேறு உதவிகளைப் புரிந்த திருமதி இரட்ணகுமார் திருமதி கௌரி ஜெகநாதன், திருமதி கருணாகரன் திருமதி வர்ணகுமாரன்,  திருமதி அரியராஜசிங்கம், திருமதி இரதீஸ்வரன், திருமதி வாகீசன், திருமதி ஜெயமோகன், திருமதி ஜெயவாணி குகராஜசர்மா, திருமதி சண்முகராஜா, திருமதி புஷ்பானந்தசர்மா, திருமதி செல்வி ஜெகன், திருமதி செல்வக்குமாரன் மற்றும் திரு வாகீசன், திரு சண்முகராஜா, திரு மயூரன், திரு ஜெகநாதன், திரு இரட்ணகுமார், திரு. பண்டிதர், திரு முருகதாஸ், திரு தேவன் கிளௌரூஸ், திரு. வீடியோ சுதா (வீடியோ), திரு இந்திரன் (சவுண் சிஸ்டம்) திரு. நவம் (மண்டப சோடனை உதவி) திரு சஜந்தன் ரதீஸ்வரன், திரு ஆகாஸ் புவனேந்திரன், அத்துடன் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள் மனோ, சிவா, பிரபா, வரதன், செல்வபாலன், கணேஷ், செல்லப்பா, ராஜேந்திரம், ரமணன், குமார், புவி, ஸ்ரீ, யோகன் உட்பட பலரும் ‘பல பொறுப்புக்களை’ பகிந்தெடுத்து செய்தமைக்காகவும்….

மற்றும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் யுத்தம் உட்பட பலவழிகளிலும் பாதிக்கப்பட்டு வாழும் மக்களுக்கு உதவும் முகமாக பலவழிகளிலும் உதவிகள் புரிந்த சுவிஸ் வர்த்தக ஸ்தாபனங்களான…

வேலா கிரடிட் (வரதன் சூரிச்), ஏ.ஜீ.எஸ் கியோஸ்க் (அப்பையா கடை சூரிச்), சிவா ட்ரவல்ஸ் (சிவா பேர்ன்), சென்னை சில்க்ஸ் (ரஞ்சன் சூரிச்),  இம்போர்ட் தாஸ் (சிறீதாஸ் சூரிச்), எஸ்.கே.ரி சொப் (நாதன் கடை சூரிச்), மிதுர்  ஜூவலரி (சங்கர் சூரிச்), முனியாண்டி விலாஸ் (லோகன் சூரிச்), ஈரோ ஹோம் போக்கல் (சந்திரன் பேர்ன்), திவா மார்க்கட்டிங்  (மனோ லுசேர்ன்), சுவிஸ்கான் (மகேந்திரன் லுகானோ), என்.எஸ். ஜூவலரி (சாந்தன் சூரிச்), எல்லாளன் இறைச்சிக்கடை (கண்ணன் லுசேர்ன்), ஸ்டேன்லி லோன்ஸி (ஜோன் சூரிச்), சாய் ரேடர்ஸ் (சாய்ரவி சூரிச்), கமல் ட்ரேடிங் (கமல் ஓல்டன்), ஏசியன் எண்டர்பிரைஸ் (பேரின்பம் சூரிச்)

வில்லியம் சேர்விஸ் புஅடிh (கஜன் சூரிச்), கனி கேஸ் அண்ட் கறி (கஜன் சூரிச்), நிம்மி கடை (மணி சூரிச்), சோலோ மூவிஸ் (வசி சொலத்தூண்), எஸ்.பி.ரி சொப் (பாஸல் ரவிகடை)

உட்பட மற்றும் இதில் தெரிந்தோ, தெரியாமலோ பெயர் தவறவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது நன்றியினை புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான திரு சுவிஸ்ரஞ்சன் அவர்கள் தனது நன்றியுரையின் போது தெரிவித்துக் கொண்டார்.

நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

008aa 008ab 008ac 008ad 008af 008ag 008ah 008ai 008ak 008al 008am 008an 008ao 008ap 008aq 008ar 008c 008e 008ea 008eb 008ec 008ed 008ee 008m 008n 008o 008p 008q 008qa 008r 008rb 008rc 008rd 008re 008rf 008rg 008rh 008ri 008rj 008rk 008rl 008rm 008rn 008ro 008ta 008u 008v 008va 008vb 008vc 008w 008wa 008wd 008we 008wf 008wg 008wh 008wi 008wm 008wn 008wo 008wp 008y 008ya 008yb 008yc 008yd 008ye 008yf 008yp008as008ra008t

சர்வதேச முனைப்புகளுக்கு ஆதரவு – ரமபோஷா

ramaposha_vikki_003இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் முனைப்புகளுக்கு ஆதரவாகவே தமது நடவடிக்கைகள் அமையும் என தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சிரில் ரமபோஷா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இ;ன்று தமமை சந்தித்தபோது ரமNபோஷா இந்த கருத்தை தெரிவித்ததாக வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தென்னாபிரிக்காவின் நல்லிணக்கம் நடவடிக்கைகளில் இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வை மேற்கொள்ளவதற்காக தாம் வந்ததாக ரமபோஷா தெரிவித்ததாகவும், வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சிறில் ரமபோஷாவிற்கு தாம் விரிவாக எடுத்துக் கூறியதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். இதேவேளை சிறில் ரமபோஷாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்றுகாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களை, முன்னுதாரணமாக கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தன்னார்வ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை-ஐ.நா அவதானம்-

இலங்கையில் இயங்கிவரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளை மீறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு ஒத்திவைப்பு-

அவுஸ்திரேலியாவில் 153 இலங்கை அகதிகளுடன் இடைமறிக்கப்பட்டுள்ள படகு தொடர்பான வழக்கு விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது. அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று தொடர்ந்தபோது குறித்த 153 அகதிகளையும் திருப்பியனுப்புவதானால் அது தொடர்பில் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் உறுதியளித்துள்ளது அதேநேரம் அரசாங்க அதிகாரிகள் குறித்த 153 பேரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு கடத்தப்பட்ட 41 அகதிகளில் 36 பேர் இன்று காலி நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்ஜசீரா ஊடகவியலாளரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை-

அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அறிக்கையிட்டமை குறித்து அல்ஜசீரா ஊடகத்தின் ஊடகவியலாளர் டினோக் கொலம்பகேவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்-

then africa upa janathipathiதென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, அவர் இந்த விஜயத்தின்போது பல அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா, வர்த்தகர், சமூக செயற்பாட்டாளர் மாத்திரமன்றி, தொழிற்சங்க தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டு முதல் தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உபத் தலைவராக அவர் செயற்பட்டு வருகின்றார். தென் ஆபிரிக்காவின் தேசிய திட்ட ஆணைக்குழுவின் தலைவராகவும் சிறில் ரமபோஷா செயற்படுகின்றார். தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா, சிறைவாசம் அனுபவித்த காலப்பகுதியில், அவரின் விடுதலைக்காக முன்னின்று செயற்பட்டவர்களில், தென்ஆபிரிக்காவின் தற்போதைய உப ஜனாதிபதியும் ஒருவராவார்.

சுவீகரிப்பு நோக்கிலான நில அளவை நடவடிக்கை தடுத்து நிறுத்தம்-

suveerakrippu nokkilaana (1)யாழ்ப்பாணம், கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்றுகாலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறுகையில், ‘திருவடிநிலைப்பகுதியில் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்களினுடைய 120 ஏக்கர் காணிகளையும், சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியினையும், மற்றும் கீரிமலையில் 6 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியும் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் இன்று மேற்கொள்ளப்படவிருந்தன. இதனை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலி.வடக்குத் தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி.வடக்குப் பிரதேச சபை உபதவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் உள்ளிட்டவர்களுடன் நானும் சென்று காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியிருந்தோம் என்று கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேர் கடற்படையினரிடம் ஒப்படைப்பு-

pukalida korikkaiyalarkal (1)அவுஸ்திரேலிய அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேர் காலி துறைமுகத்திறக்கு அழைத்துவரப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘சமுதுர’ கப்பலிடம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்களை ஏற்றிய கப்பல் இன்றுமுற்பகல் காலி துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்புப் பிரிவினரால் கொகோஸ் தீவுகளுக்கு மேற்கேயுள்ள கடற்பிராந்தியத்தில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்டது. இவர்களில் 37 சிங்களவர்களும், நான்கு தமிழர்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 153 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கிறிஸ்மஸ் தீவை நெருங்கிய படகு தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும்-

NARENDRAMODIபாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்;பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியான தலையீட்டை செலுத்த வேண்டும் என இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனம் கோரியுள்ளது. கச்சதீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனத் தலைவர் எம்.இளங்கோ தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்திய – இலங்கை உயர்மட்ட அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் இந்திய தேசிய கடற்றொழில் நிறுவனத்தின் தலைவர் எம்.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

முகமாலையில் மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பம்-

முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இன்று மீண்டும் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொண்டுவரும் நிலையில் மனித புதைகுழிக்கான எச்சங்கள் காணப்படுமாயின் பொலிசாருக்கு தகவல் வழங்க தீர்மானித்துள்ளதாக மிதிவெடியகற்றும் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் முதல் இப்பகுதியில் உள்ள பற்றைக்காடுகள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. மிதிவெடிகள் அகற்றப்படாத பகுதிகள் இன்னமும் உள்ளதால் மிதிவெடி அகற்றும் நிறுவன பணியாளர்களின் ஒத்துழைப்புடன் இச்செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. முகமாலையில் கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் கடந்த புதன்கிழமை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அப்பகுதியில் நிலத்தைத் தோண்டும்போது எலும்புக்கூடு ஒன்றை அவதானித்தனர். இது குறித்து உடனடியாக பளைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்புத் துண்டு எச்சங்களும் மீட்கப்பட்டன.

மீன்பிடிப் பிரச்சினை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு-

பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடிப்பதில் நிலவும் பிரச்சினை குறித்து இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இவ்வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரீஸ்சிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்சிற்கும் இடையிலான சந்திப்பில் இது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு கட்டணம் செலுத்தி கச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெறுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாக்குநீரிணைப் பகுதியில் இரண்டு நாடுகளினதும் மீனவர்கள் பரஸ்பரம் கைது செய்யப்படுகின்றமை பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இதேவேளை தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் மூன்றாவது நாளாகவும் விசாரணை-

kaanaamat ponorகாணாமற்போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. ஆணைக்குழுவின் ஐந்தாவது பகிரங்க அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமர்வுகளின்போது 51பேர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக முறைப்பாடுகளையும் முன்வைத்திருந்தனர் யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் இதன்போது அநேகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்றையதினம் நடைபெறும் அமர்வில் பங்கேற்று சாட்சியமளிக்குமாறு 12 கிராக உத்தியோகத்தர்கள் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வட்டரக்க தேரருக்கு பிணை-

gnaana theroபொலிஸாரை ஏமாற்றுவதற்காக பொய் முறைப்பாட்டை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரான வட்டரக்க விஜித்த தேரரை, பிணையில் விடுவிக்குமாறு பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார். 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில். தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்கமாட்டேன் எனவும் தான் நிரபராதி எனவும் வட்டரக்க விஜித்த தேரர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

ஞானசார தேரருக்கு நீதவான் அறிவுரை-

சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்க்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரா தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் அறிவுரை வழங்கியுள்ளார். தனது கட்சிக்காரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் உரிமை சட்டத்தரணிக்கு உண்டு. அவர்கள் நீதிமன்ற அதிகாரிகளாகவே கருதப்படுகிறார்கள். அவ்வாறானவர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு-2, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏப்ரல் 9ஆம் திகதி இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஜீலை 7ஆம் திகதி திங்கட்கிழமை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு ஜீன் 9ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-

siththankerny sri ganesha vidyalayam (3)siththankerny sri ganesha vidyalayam (2)siththankerny sri ganesha vidyalayam (1)யாழ். சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 25.06.2014 திங்கட்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் பாடசாலை அதிபர் செல்வி ஜெயராணி நாகலிங்கம் தலைமையில் வித்தியாலய மணடபத்தில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இளைப்பாறிய அதிபர் திரு.க.சந்திரசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரையினை நிகழ்திய அதிபர் அவர்கள் பாடசாலையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் உரையாற்றியதோடு பாடசாலையின் பெறுபேறுகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தார். இவ் நிகழ்வில் உரைநிகழ்திய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், இன்றைய காலச் சூழல் என்பது மாற்றத்துக்கு உள்ளாகி வரும் காலச்சூழலாகவே உள்ளது. மிக கொடிய நீண்ட போரின்போது நாம் பலவற்றையும் இழந்து விட்டோம். இன்று எம் மத்தியில் உள்ள ஒன்று மற்றவர்களாலும் எதிரியாலும் அழிக்க முடியாத ஒன்று கல்வி மட்டுமே ஆகும். இக் கல்விக்கான வாய்ப்பு சரியானதும் முறையானதுமாக அமைய நாம் அனைவரும் ஒன்று படவேண்டிய தேவை இன்றுள்ளது. இன்று மாணவர்கள மத்தியில் பல திட்டமிடப்பட்ட வகையில் கவனக்கலைப்பான் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இது எமது கல்விநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இவ்வாறாக எமது கல்வியை நாம் சீரளிப்பதற்கு உடந்தையாக இருக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும். பிள்ளைகளது ஒவ்வொரு செயற்பாட்டிலும் பெற்றோர் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படும் போதுதான் எமது கல்விப் புலத்தையும் எமது கல்வி நிலையின் இருப்பையும் நாம் காப்பாற்ற முடியும். வெறுமனே பிறரில் குறைகூறும் நிலையினாலோ அல்லது வெறும் அறிக்கைகள் மற்றும் மேடைப் பேச்சுகளாலே எதையும் சாதித்துவிட முடியாது. காலத்தின் தேவை அறிந்து நடப்பவர்களாக இருந்தால் மட்டுமே உரிய நோக்கையும் இலக்கினையும் அடைய முடியும். இதற்கும் மேலாக இன்று நடைபெறும் கலாச்சார சீரழிவுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் பெற்றோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியநிலை இன்று காணப்படுகின்றது. இதுவரை தொலைக்காட்சிகள் ஊடாக பார்த்த பலவும் இன்று நேரடியாக பார்க்கக்கூடிய நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை தொடர்பானவர்களை விடுவிக்க பா.ஜ.க எதிர்ப்பு-

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்று எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனுமீது தாமதமாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி அறிவித்தார். மேலும் இது குறித்து மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவர்களை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெப்ரவரி 20ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து ஏப்ரல் 25ஆம் திகதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது.

சங்கரத்தை கஜமுகன் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா, வலிமேற்கு பிரதேசசபை பொதுக்கூட்டம்-

sangaraththai kajamugan munpalli (2)யாழ். சங்கரத்தை கஜமுகன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா வலி மேற்கு பிரதேச சபை மைதானத்தில் சட்டத்தரணி சுகாஸ் தலைமையில் கடந்த 18.06.2014 புதன்கிழமை அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் அவர் உரையாற்றும்போது இன்றைய இவ் இளைய தலைமுறையே எமது எதிர்காலத்தின் முக்கிய தூண்களாக இருக்கக்கூடியவர்கள் இவர்களது கல்வியில் மேல்நிலை பெற சழூகத்திலுள்ள அனைவரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.இச் சிறார்களுக்கு இப் பருவத்திலேயே கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட வழிவகுக்கும். இச் சிறுபராயத்தில் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும் அக் கல்வி விரும்பிப்படிக்ககூடிய ஒர் கல்வியாக அமைய வேண்டும். சிறு வயதிலேயெ வேண்டாத கல்வியாக மாறக்கூடியதாக அமையக் கூடாது. கற்கின்ற சூழல் மாணவர்கள் விரும்பத்தக்க இடமாக மகிழ்ச்சிகரமான சூழலாக அமைவது சிறார்களுடைய கல்விக்கு சிறப்பாக அமையும். இந்த வகையில் இவ் இடத்தில் மிக திறமையான முறையில் இவ் முன்பள்ளியை அமைத்து சிறார்களின் வளர்ச்சிக்கு உதவிய புலம் பெயர் உறவுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த 19.06.2014 அன்று தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது இவ் நிகழ்வில் எதிர்வரும் உள்ளுராட்சி வாரத்தின் பொருட்டு ஆதன வரி மற்றும் ஏனைய வரிகள் தொடர்பில் இது வரைசெலுத்த தவறியவர்கள் செலுத்தும் சந்தர்ப்பத்தில் 10 சதவீத விலக்களிப்பு வழங்குவதற்கு சபையினர் ஏகமனதாக தீர்மானித்தனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் இளைஞர் வெட்டிக் கொலை-

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரை இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலைக்குள் புகுந்து நேற்று இரவு வாளால் வெட்டியதில் இளைஞர் பலியாகியுள்ளார். அல்லாரை பகுதியை சேர்ந்த உதயகுமார் அன்பழகன் (வயது 26) என்னும் இளைஞரே பலியாகியுள்ளார். கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலில் நேற்றுமாலை நடைபெற்ற இசை நிகழ்சியை பார்வையிட்ட இரு இளைஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து இரு இளைஞர்களும் தத்தம் இளைஞர் குழுவுடன் வந்து கோயிலுக்கு சற்று தொலைவில் வாள்கள், கத்திகள், பொல்லுகளால் மோதிக்கொண்டனர். இம் மோதலில் கு.பிரசன்னா, க.சுகிர்தன், ஞா.குருபரன், உ.அன்பழகன் ஆகிய நால்வர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிலமணி நேரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர்குழு அங்கு சிகிச்சை பெற்றுவந்த உதயகுமார் அன்பழகன்மீது வாள்களால் வெட்டிவிட்டு தப்பிசென்றுள்ளனர். வாள்வெட்டில் உதயகுமார் அன்பழகன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கெண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டுக்கு எதிரான சக்திகளின் பின்னணியில் புலிகளே உள்ளனர்-மைத்திரிபால-

நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளின் பின்னணியில் வெளிநாடுகளில் உள்ள புலிகளே இருப்பதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறினேச தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணையின் இறுதியில் நாட்டை பிரிப்பதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலவக்கயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரபாகரனின் மீது கைவைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை தற்போது இல்லை. இந்த சர்வதேச விசாரணையின் பின்னணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளின் எஞ்சியுள்ள விடுதலை புலி செயற்பாட்டாளர்களே. இந்த நிலையில், இவ்வாறான விசாரணையின் பின்னர் எந்த நாடும் முழுமையானதாக இல்லை. எல்லா நாடுகளும் பிரிந்தே சென்றன. அதுவே வரலாறு. இதனையே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு-

யாழ். முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நாட்களில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டதுடன் வெடிபொருட்களும் இதர பொருட்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு மேற்கொள்வதற்கு பற்றைக்காடுகள் தடையாக இருந்தமையினாலேயே அவற்றினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மிதிவெடிகள் அதிகம் இருப்பதினால் மிதிவெடி அகற்றும் பணியாளர்களின் மூலம் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வீசாவின்றி பயணம், மோசமான நாடுகள் வரிசையில் இலங்கையும் அடக்கம்-

விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹென்லி அன்ட் வீசாவரையறை சுட்டி நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலத்தீனம், சூடான், நேபாளம், லெபனான், கொசோவோ, சிரியா, தென் சூடான், லிபியா, மியன்மார், ஈரான், வடகொரியா, அங்கொலா மற்றும் டிஜிபோட்டி உள்ளிட்ட நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. குறித்த நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் உரிமையை முடக்கி வருவதாக கூறப்படுகின்றது. மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பின்லாந்து, சுவீடன், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. குறித்த நாடுகள் வெளிநாட்டுக்க பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கிவருகின்றன.

வீரமக்கள் தின நிகழ்வில் பங்கேற்கும் முகமாக புளொட் தலைவர் சூரிச் பயணம்-

1069358_426252397488690_1781610741_nநாளை காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள்தின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை சூரிச் நோக்கிப் பயணமானார்.

நாளை ஞாயிறன்று காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின்போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

PhLEPQt4PlEgGzRXH_goObMKu4bEgyLLKG2Ua3rb_HY25ஆவது வீரமக்கள் தின நிகழ்வின்போது மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், இதன்போது போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியை செலுத்தி, உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வின்போது இடம்பெறவுள்ளன.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை நடைபெறவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்விலும் புளொட்டின் வெளிநாட்டுக் கிளைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளனர்.

சுவிஸ் கிளை – தொடர்புகளுக்கு- 079.6249004 079.8224153 077.9485214 Read more

சுவிஸில் 25ஆவது வீரமக்கள் தினம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்ப்பு

plote.uma-v.m.tபுளொட்டின் சுவிஸ் கிளை நடாத்தும் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

DSC00679மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
06.07.2014 அன்றையதினம் காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன்.  பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. Read more

இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்-

iraanuvaththai  (3)iraanuvaththai ve (5)valiyuruththi (3)iraanuvaththai  (1)இராணுவ ஆக்கிரம்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றுகாலை 11.00 மணி முதல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினுள் பொதுமக்கள் செல்ல பொலிஸார் தடைவிதித்திருந்தனர். ஆர்பாட்டம் நடத்தி மாவட்ட செயலகத்தினுள் மக்கள் செல்லவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலையே தாம் பொதுமக்களை உட்செல்ல அனுமதிக்கவில்லை என பொலீஸார் கூறியுள்ளனர். இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சரின் கூற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில்-

sureshதமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களை ஒருபோதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியதில்லை. தமிழ் மக்களே கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என கொள்ள முடியாது. கூட்டமைப்பை ஏக பிரதிநிதிகள் என மக்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயார். எனினும் அவ்வாறு இல்லாத நிலையில் கூட்டமைப்பை ஏக பிரதிநிநி என அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதில் வழங்கும் முகமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல்களின் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ள ஆணை அதனை தெளிவுப்படுத்தியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை-

velivivakaara amaichcharஇலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ், அடுத்தவாரம் டெல்லி செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது, பீரீஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்வு, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இதன்போது இருவரும் விவாதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றபிறகு இதுவரை 175 தமிழக மீனவர்கள், இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழக மீனவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் பதிலளித்துள்ளார்.

வவுனியா விபத்தில் பெண் ஸ்தலத்தில் பலி-

vavuniya vipaththil pen pali (1)அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனமொன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹைஏஸ் ரக வாகனம் இன்றுமுற்பகல் 10.50மணியளவில் வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டைப் பகுதியில் வளைவொன்றில் திரும்பியபோது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்தின்போது படுகாயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு-

jaffna_student_001யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு 3ம் வருட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த யசோதரன் (வயது24) என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், யாழ். நாச்சிமார் கோவிலடியில் வாடகை அறையில் தங்கி இருந்து பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்தவர் எனவும் இன்றுகாலை அவரது அறைக்கு வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வீடொன்றுக்கு முன்பாகவுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளைஞனின் சடலத்தை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக 500 தாக்குதல்கள்-ஐ.நா-

UNஇலங்கையில் கடும்போக்குவாத பெரும்பான்மை மதக்குழுக்களினால் ஏனைய மதத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை இலங்கையரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஐ.நா ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் மதத்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குற்றம் புரிந்துவிட்டு தப்பித்து விடலாம் எனும் சூழல் வன்முறையைத் தூண்டுவதாக ஐ.நாவின் மதச் சுதந்திரத்திற்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலெஃபெல்ட் கூறியுள்ளார்.

இலங்கை எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை-பிரித்தானியா-   

யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதில் அளிக்கும் செயற்பாட்டில் இலங்கை எதிர்பார்த்த மட்டத்தை அடைய தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட விசேட விவாதம் ஒன்றில் உரையாற்றிய பொதுநலவாய சபையின் அலுவலக அரச அமைச்சர் பரனேஸ் வாசி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அவசியம் வலியுறுத்தப்படுவாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க விசேட பிரதிநிதி திங்கள் இலங்கைக்கு விஜயம்-

then africa viseda pirathinithiஇலங்கைக்கான தென் ஆபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிரில் ராம்போசா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கிலேயே ராம்போசாவின் விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ராம்போசாவின் இலங்கை விஜயம் தொடர்பில் தமக்கு எவ்வித தகவல்களும் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக ராம்போசா அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதான சமூகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது-ஆஸி பிரதமர்-

ilankaiyil samaathana samukmஇலங்கையில் சமாதான சமூகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளை ஏற்றிவந்த இரு படங்குகள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் வானொலி நிகழ்ச்சியில் இன்றுகாலை கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் நடுக்கடலில் வைத்து அகதி படகுகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் இரகசியங்கள் இல்லை. இது தேர்தலுக்கு முன்னரே நாம் கொள்கையாக வெளியிட்ட விடயமாகும் என்றார் அவர். இதேவேளை தாம் தப்பிவந்த நாட்டுக்கே மீண்டும் அகதிகளை திருப்பியனுப்புவது குறித்து அபோட்டிடம் கேட்டபோது, தாம் சர்வதேச சட்டங்களை மதிப்பதால் அதன்படி செயற்படுவதாகவும், போருக்கு பின்னர் இலங்கையில் மனித உரிமை விடயங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கச்சதீவை மீளப் பெறுமாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்-

kachchativai meelaகச்சதீவு குறித்து மத்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் கச்சதீவை இந்தியா மீள பெறுவதற்கு மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கச்சதீவு தொடர்பில் மத்திய அரசு அண்மையில் உயர்நீதிமன்றில் தெரிவித்த கருத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் மேலும் கூறியுள்ளார்.

திலீபனின் சடலத்தை தேடி சோதனை நடவடிக்கை-

thileepanin sadalathaiஇந்திய அமைதிகாக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. இத்தகவல் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. புலிகளை மீளக்கட்டியெழுப்ப முயற்சிக்கிறார் என்ற சந்தேககத்தின்பேரில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவரை விசாரணை செய்தபோதே திலீபனின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள விடயம் அம்பலமானது என்று பொலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

சுவிஸில் வீரமக்கள் தின நிகழ்வில் புளொட் தலைவர் கலந்து கொள்கிறார்-

Sithar-ploteஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06.07.2014) அன்று புளொட்டின் சுவிஸ் கிளையின் சார்பில் சூரிச் மாநகரில் நடாத்தப்படவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் தனது அஞ்சலியினை செலுத்துவார்.

புளொட்டின் 25ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளாக பிற்பகல் 02.00 (14.00) மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின்போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை நடைபெறவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்விலும் புளொட்டின் வெளிநாட்டுக் கிளைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளனர்.

சுவிஸ் கிளை – தொடர்புகளுக்கு- 079.6249004 079.8224153 077.9485214

மனிதவுரிமை மீறல் பற்றி தகவல் அளிப்போரை பழிவாங்கக்கூடாது-ஐரோப்பிய ஒன்றியம்-

untitled eஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள, சர்வதேச விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவர் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கின்ற நபர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கைமூலம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய ஆவணம்-

kaithikalin pukai padankaludanசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். கைதிகளின் புகைப்படங்கள் இன்மையால் அவர்களை மீண்டும் கைதுசெய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம் கைதிகளின் புகைப்படங்களை எடுப்பதற்கான அதிகாராம் உள்ளது. தொடர்ச்சியாக கைதிகள் தப்பிச்செல்வதால் அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பணிப்புரை விடுத்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகமாலையில் பெண் புலி உறுப்பினர்களின் சட எச்சங்கள் மீட்பு-

muhamaalaiமுகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலி உறுப்பினர்களின் சீருடைகள் மற்றும் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை புகையிரதக் கடவையிலிருந்து 15 மீற்றர் தூரத்திலேயே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். இதன்போது பெண் புலி உறுப்பினர்களின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி(நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40, சலவைத்தூள் பைகள், சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உடன் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் புலிகளது சோதனைச் சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை-மத்திய அரசு-

கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீனவர் பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பதில் மனுவில் தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் புதிதாக கூடுதல் பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை அதேசமயம் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி அங்கு மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும், ஓய்வெடுத்துக் கொள்ளவும் பாரம்பரிய உரிமை உண்டு. மேலும் தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அரசு நியாயப்படுத்தக் கூடாது என மேலும் கூறப்பட்டுள்ளது.

புதிய கடற்படைத் தளபதி நியமனம்-

கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த பெரேரா இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அட்மிரல் ஜயனாத் கொலம்பகே ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையில் புதிய நியமனத்தை ஜயந்த பெரேரா பெற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதேவேளை இலங்கை கடற்படையின் கட்டமைப்பை அதிசிறந்த முறையில் மேம்படுத்த நவீன பாரிய கப்பல்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக புதிதாக பதவியேற்ற கடற்படைத் தளபதி ரியர் எட்மிரல் ஜயந்த பெரேரா தெரிவித்துள்ளார். கடற்படையில் நான் 38 வருட காலம் சேவையாற்றிய பின்னரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட எந்த தளபதியும் இவ்வளவு நீண்டகாலம் சேவையாற்றவில்லை. நான் கடற்படையின் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளேன். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் கவனமாக பதில் கூறவேண்டும் என்ற அனுபமும் எனக்கு நன்றாக உண்டு. புலிகளின் தற்கொலைப் படகுத் தாக்குதல்களை முறியடித்து புலிகளுக்கெதிரான போரை வெற்றி கொண்ட அனுபவம் எமது கடற்படையினருக்கு உண்டு. எமது படைகளிடம் பயிற்சி பெற இன்று நைஜீரியா  முன்வந்துள்ளது. நாம் யுத்தத்தை வெற்றிகொண்ட விதம் குறித்து பாகிஸ்தானும் வியந்து பாராட்டியுள்ளது.  மேலும் கடல் ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க கடற்படை எப்போதும் தயாராகவே உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார். 

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குறித்து கருத்து வெளியிட ஆஸி பிரதமர் மறுப்பு-

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பினை சென்றடைந்ததாகவும், அங்கிருந்து அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்கும் எமது கொள்கை வெற்றியளித்துள்ளது. கடந்த ஆறுமாத காலமாக புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கவில்லை. கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையில் இலங்கைக் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு வெளியிலிருந்து தகவல் பெற வழிகள்-

இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும் நாட்டில் இடம்பெறுகிற விடயங்கள் குறித்த தகவலகளை பெறுவதற்கான மூலங்கள் தம்மிடம் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான சர்வதேச குழுவின் பணிகள் தயாராக இருப்பதாக ஆணைக்குழுவிற்கான ஆலோசகர் அஸ்மா ஜெஹாங்கீர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள் குடியியல் சமூகங்களின் பிரதிநிதிகளிடமும் ஊடகங்களிடமும் இருந்தும் அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவை கூட்டத்தின்போது ஆணையாளர் நவனீதம்பிள்ளையால் இக்குழு நியமிக்கப்பட்டது.  

அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்கும் காலம் நீடிப்பு-

அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு தொடர்பில் மக்களது ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என கூட்டமைப்பு கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி அறிவித்திருந்தது. இதன்படி அறிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் மேலும் 2 வாரங்களுக்கு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

சமூக அபிவிருத்தி திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி-

நாட்டின் சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக, அவுஸ்திரேலியா 27 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பே இந்த நிதியை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள 12 அமைப்புக்களிடம் கையளித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ், இவை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டத் துறையினரின் கல்வி வசதிகளை மேம்படச் செய்யும் திட்டங்கள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி, நிவாரண நடவடிக்கைகள், வாழ்க்கைத்தர அபிவிருத்தி, சுகாதார துறை. ஆரோக்கிய வசதிகள் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

சாய்ந்தமருதில் மத ஒன்றுகூடல் கட்டடம் மீது தாக்குதல்-

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் மத ஒன்றுகூடல் கட்டடம் ஒன்றை அடையாளம் தெரியாத சிலர் தேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஒரே மதத்தைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு-

பொல்கஹவெல, பொதுஹரவுக்கு இடையில் பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலைமையை மிக விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.