Header image alt text

வெள்ளத்தால் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு-

velzam(1)8216FLOOD7நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்டங்களிலும் 12,855 குடும்பங்களைச் சேர்ந்த 46,746 பேர் 205 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read more

ஜனாதிபதியின் ‘மகிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ வெளியீடு-

mahindaபுதிய அரசியலமைப்பு பிரவேசத்திற்கு தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளர். ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அங்கு உரையாற்றினார், இதன்போது அவர், இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் வாக்குறுதி என்பது சில மாதங்களில் மறந்துபோகும் ஆவணம் மாத்திரமே. மஹிந்த சிந்தனை என்பது Read more

இன்றும் நாளையும் அஞ்சல் மூல வாக்களிப்பு-

postal_votes_2ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் நாளையும் நடத்தப்படுகின்றது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமது வாக்காளர் தொகுதியிலிருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பிரதேசத்தில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக மேற்படி இரு தினங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படுகின்றது. இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக பலர் விண்ணப்பித்திருந்தபோது பல்வேறு காரணங்களுக்காக சில விண்ணப்பங்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டனர். அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அரச அலுவலகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் அடையாளமிடும் சின்னம் பிறர் அறியாத வகையில் இரகசியமாக பேணப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும் நாளையும் வாக்களிக்க தவறியவர்கள் 30ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 26ஆம் திகதியன்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு 30 ஆம் திகதியன்றும் அஞ்சல்மூல வாக்களிப்பு நடத்தப்படும்.

ராகலையில் மண்சரிவு அபாயம், 60 குடும்பங்கள் இடம்பெயர்வு-

warningமண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா – ராகலை தியனில்ல பகுதி 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கன மழை காரணமாக தியனில்ல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இவர்களை தோட்ட கோவில்களில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு நிலம் வெடித்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்ததோடு அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க தீர்மானம் எடுத்த போதும் அந்த தீர்மானம் இன்று வரை நடைபெறாததால் மக்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு, மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது – கபீர் ஹசிம்-

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை தயாரித்து அதனை இரகசிய உடன்படிக்கை என கூறுவதாக கபீர் ஹசிம் கூறியுள்ளார். இதேவேளை அரசாங்கம் போலியான ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும் அதில் உள்ள கையெழுத்தும் போலியானதெனவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு-

அரச சேவையாளர்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் செயற்பாடுகளுக்கான பயன்பாடுத்தப்படுவது தொடர்பில் ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையாளருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அரச உடமைகள் பாவனை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கோண்டாவில் கிழக்கில் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

kondavilயாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக் கழகத்தினது உயர்த்தும் கரங்கள் செயற்பாட்டின் ஊடாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கிராமத்தின் வறிய மாணவ, மாணவியர்க்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (21.12.2014) இடம்பெற்றது. ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ம. சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் சனசமூகநிலைய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திரு. இ.கெங்காதரன் அவர்களும் சமூக சேவையாளர் திரு. ஜெயக்குமார் அவர்களும் மேலும் பல இளைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

kondavil0 kondavil1 kondavil2 kondavil4 kondavil5 kondavil6 kondavil7 kondavil8 kondavil9 kondavil10

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமீர் அலி எம்.பி பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு-

mathri richardஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பின்னர் அமீர் அலி ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இன்றுபிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர்கள் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து தமது ஆதரவினை தெரிவிததுள்ளனர். இவர்களது தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார். எதிரக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன திறந்தவெளி அரங்கில் எதிரணியின் தேர்தல் கூட்டம்-

kinikath1kinikathஎதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.மு. பியதாச தலைமையில் நேற்று (21.12.2014) ஞாயிறு மாலை கினிகத்தேன திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பெருந்திரலான பொதுமக்களும், ஜனாதிபதி வேட்பாளரும் முன்னைய சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அவர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான, பாட்டாளே சம்பிக்க ரனவக்க, ஜனநாயக கட்சி தலைவர் ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களும், ஜனநாயக தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுரூபரன், புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், ஜனநாயக தேசிய முன்னணியின் பிரதித்தலைரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் அவர்களும், ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைவர், ஆ.ளு. செல்லச்சாமி அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான யோகராஜன், ராஜதுரை, ராதாகிருஸ்ணன்,மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், ஜக்கிய தேசிய கட்சி மற்றும் எதிர் அணி அமைப்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்-

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மொரிசீயசுக்கு வெள்ளிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தொடர்பான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங், 2 ஆழ்கடல் ரோந்து கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை இலங்கை கொடுத்துள்ளது. இந்த கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்கள் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த தகவல், இந்தியாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்-

v.tna0தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பிரதிநிதிகளின் கருத்தறிதல் கூட்டமொன்று  இன்றுமுற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற கருத்திறயும் கூட்டத்தின் தொடர்ச்சியாகவே வவுனியா மாவட்டத்தில் இன்று இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்களும், பிரதேசசபைத் தலைவர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் தீர்மானம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு அவர்களின் கருத்துக்களும் அறியப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும்கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவினை எடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

v.tna v.tna1

தோழர் மணியம் அவர்களின் 25ஆவது சிரார்த்ததினத்தையொட்டி நூல் வெளியீடு

maniyam0இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது), புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 25ஆம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு வெளியான லெனின் மதிவாணன் அவர்களின் சமூக இலக்கியத் தளங்களில் படைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. பேராசிரியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு ஆர் சங்கரமணிவண்ணன், மல்லிகைப்பூ சந்தி திலகர், எம். வாமதேவன், கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

maniyam2maniyam

வெள்ளம் காரணமாக வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு-

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது. அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு-

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாத்தறை, நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆபத்து காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. மாத்தளை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வீதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக நடவடிக்கை-லோரன்ஸ்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என அக் கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் நேற்று அறிவித்துள்ளார். இதுபற்றி மலையக மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் ஏ.லோரன்ஸ் கூறுகையில், தீடிரென கூட்டம் ஒன்று கூட்டி கலந்துரையாடி இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது ஒரு நியாயமான செயல் அல்ல. பொது செயலராகிய எனக்கும் இது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை. இது சட்டவிரோதமான ஒரு செயலாகும். ஆரம்பத்தில் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்போம் என தீர்மானம் எடுத்ததையடுத்து இப்படி தீடிரென மாறுவது குறித்து நான் கவலையடைகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் மலையக மக்கள் முன்னணியின் தலைவி எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த பின் இப்படி தாவியமை குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பொதுசெயலர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளர் வே.இராதாகிருஷ்ணன் அரசிலிருந்து விலகி எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.

m1mபொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­திரி பால சிறி­சேன நேற்று தனது தேர்தல் விஞ்­ஞா­பனத்­துடன் 100 நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். அந்த 100 நாள் திட்­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார சமூகம் சார் செயற்­பா­டுகளின் விபரம் வருமாறு.

1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல்.

2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசா­தா­ர­ணத்­திற்கு உள்­ளான அரச ஊழி­யர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்­க­ளுக்கும் நிவாரணம் வழங்குதல்.

3. அர­சியல் அடிமை வேலை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பட்­ட­தா­ரி­களை அரச சேவைக்கு உள்­ளீர்த்து அவர்­களின் தகை­மை­க­ளுக்கு ஏற்ற பதவி உயர்வு திட்­டத்தை ஏற்­ப­டுத்தல்.

4. ஓய்­வூ­தி­ய­தா­ரர்­களின் வேற்­று­மையை அகற்றும் வகையில் அவர்­க­ளுக்கு 3500 ரூபா மாதாந்த மேல­திக கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுத்தல்.

5. அரச வங்­கி­களில் உள்ள சிரேஷ்ட பிர­ஜை­களின் நிலை­யான வைப்­புக்­களில் முதல் 10 இலட்­சத்­திற்­காக செலுத்­தப்­ப டும் வட்டியை 15மூ வரை அதி­க­ரித்தல். Read more

Punnalai9யாழ்.. புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று (19.12.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து 30,000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு கெங்கா அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வின்போது நலன்விரும்பிகள் சிலரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களும் இக்கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. திரு. கெங்கா அவர்களின் ஏற்பாட்டில் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் விடுமுறை நிறைவடைந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பதாக இப்பிள்ளைகளுக்குத் தேவையான மேலும் பல உபகரணங்களையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் மாணவர்களும், பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Punnalai1 Punnalai3 Punnalai4 Punnalai5 Punnalai6 Punnalai7 Punnalai10 Punnalai11 Punnalai12 Punnalai13