புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் மரணம் சக மாணவர்கள் போராட்டம் –

untitledmurder_jaffna_007புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவியின் மரணம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் மர்மம் நீடிக்கிறது. இதனை அடுத்து நீதிகோரி சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
காலை மாணவர்கள் ஒன்று திரண்டு வீதிகள் அனைத்தினையும் மூடி போராட்டத்தில் குதித்திருந்தனர். பின்னர் அவர்களிற்கு ஆதவாக பெற்றோர், ஊர்மக்கள் என பலரும் இணைந்து கொண்டு இச்செய்தி அறிக்கையிடப்படும் வரை நீதி வேண்டி போராட்டங்களை முன்னெடுத்தவண்ணம் உள்ளனர். காவல்துறை அப்பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருப்பதுடன் பதற்றம் நீடிக்கின்றது.
நேற்றுப் புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர்..   இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
அவரது இருகால்களும் தடியொன்றில் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவியின் மரணம் கொலையாக இருக்கலாமா என சந்தேகிக்கும் சகமாணவர்கள் மற்றும் ஊரவர்கள் நீதி கோரி போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழு

articleஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய  அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உப-குழு விரிவாக ஆராயும்.
அந்த உப-குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கை, அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவைப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றின் ஆயுட்காலம் அருகில் நெருங்கிகொண்டிருக்கின்றது – பிரதமர் ரணில்

 Ranilநாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த சட்டமூலத்தை புதிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கே எதிர்ப்பார்த்திருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டின் கொள்கையாக ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் பயங்கரவாதிகள் பிரச்சினை மட்டுமன்றி வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகள் இலங்கையை தளமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான சட்டங்கள் அதில் உள்ளடக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார்.

modiசீன அதிபர் ஜி ஷின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்பு முக்கிய அதிகாரிகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். இரு நாட்டு வர்த்தகம் மற்றும் சீன முதலீடு குறித்து பேசினர். அப்போது இந்தியா, சீனா இடையே 20 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து சீன வர்த்தக குழுவினருடன் பிரதமர் சந்தித்து பேசினார். முன்னதாக ஜியானில் உள்ள அருங்காட்சியகம், பிரபல கோயில்கள் சென்று வழிப்பட்டார்.
நடைமுறையை தளர்த்தினார் அதிபர்: சீன அதிபர் எப்போதும் முக்கிய தலைவர்களை பெய்ஜீங்கில் தான் சந்திப்பது வழக்கம். இந்த முறை பிரதமர் மோடியை ஷியானில் சந்தித்துள்ளார். வழக்கமான பாரம்பரியத்தை மாற்றினார் அதிபர்.
20 ஒப்பந்தங்கள்: பயணத்தின் இறுதி முடிவில் இரு நாடுகள் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரயில்வே மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு  பிதிர்க்கடன்கள் நிறைவேற்ற கீரிமலை தீர்த்தத்தில் ஏற்பாடு:-

fig-17வெள்ளமுள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரவும் மற்றும் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் சமயச் சடங்குகளை மேற்கொள்ளும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளும் காரைநகர் மக்களின் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதனையாரும் அரசியல்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர் மக்களுடைய உணர்வுகளை மதித்து அவர்கள் தமது உறவுகளை நினைத்து பிதிர் கடன்களை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலை தீர்த்தக் கரையில் செய்யப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் கீரிமலையில் பிதிர் கடன் நிறைவேற்றுவதற்கும் அதற்கு வேண்டிய பொருட்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. அத்துடன் பிதிர்கடன் கிரியைகளுக்கான  உரிய அந்தணர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

த.வி.புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது – அரசாங்கம்.

ltteயுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், அதற்கு வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு’
விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலா நிகழ்வுகளுக்கு இடமில்லை என பௌத்த சசான மற்றும் சுதேச விவகார அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்காக அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் ஜனநாயக சுதந்திர சூழ்நிலைகளை சில தரப்பினர் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிப்பதாகவும், நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதனை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், அதற்கு வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பயங்கரவதம் தலைதூக்கியதாக வெளிக்காட்ட முயற்சிகளை எடுக்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகளை நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டுமாம்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சொல்கிறார்.
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை நினைவுகூரும் வகையில் வடக்கில் எந்தவொரு நிகழ்வும் இடம்பெறக் கூடாது. அதையும் மீறி யாரேனும் நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை ஒற்றுமைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்­பிட்டார் .
முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் தலைவரும் என்ற வகையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்ட காலமாகவே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் எந்த செயற்பாடுகளும் இலங்கையில் சட்ட விரோதமானதே.

நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவு கூர்வதும் சட்ட விரோதமான விடயமேயாகும். இவ்வாறான விடயங்களை தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதுகாப்பை பலப்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் பழிவாங்கல் அரசியலை செய்யாது பாதுகாப்பு விடயத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். முன்னாள் அரசாங்கத்தில் உள்ளவர்களை கைது செய்து பழிதீர்ப்பதை மட்டுமே செய்யாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் அமைப்பினரையும் நபர்களையும் கைது செய்ய வேண்டும்.

அதேபோல் யாரேனும் வடக்கில் புலிகளை நினைவுகூர்ந்தால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் எப்போதும் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு தமது கடமையை செய்யவேண்டும்.

மேலும் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. இவ் விடயம் தொடர்பில் நாம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம் எனவும் தெரிவித்தார்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் அனுஸ்டிப்பு-

ppd_CIமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். அமைதியாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வினை அவதானித்த வீதியால் பயணித்த பொதுமக்கள் பலரும் தாமும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

அன்று காலை தமிழாராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்னதாக அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தை செல்வா சதுக்கப்பகுதியினில் அஞ்சலி நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

இலங்கை: இறந்தவரை நினைவுகூர உரிமை தேவை

tamil_civil_societyஇலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று (10.05.15) கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் யுத்தத்தில் உயிரழந்த அனைத்து தரப்பினரையும் அச்சமின்றி நினைவுகூரும் உரிமை இல்லாத சூழல் நிலவுவதாக கவலை வெளியிடப்பட்டிருக்கிறது.இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதவற்கு முன்னைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றிருக்கின்றது.
இதில் கலந்துகொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுதி யுத்தத்தில் இறந்துபோன பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் நினைவுகூரவிடாமல் இலங்கை அரசாங்கமே இதுவரை தடுத்திருந்த செயலானது தமிழ் மக்களுக்கான உரிமை மீறல் என்று தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற பலதரப்பட்ட துயரமான சம்பவங்கள் வெளியில் தெரியவந்துவிடும் என்று இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருந்தது என்றே தாம் நினைப்பதாக தெரிவித்த ரூக்கி பெர்னாண்டோ, இறந்தவர்களையும் அவர்கள் இறந்துபோன அந்தச் சந்தர்ப்பங்களையும் மக்கள் நினைவுகூரும்போது உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அங்கு என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மை வெளியில் தெரியவரலாம் என்று அஞ்சிய அரசாங்கம் அப்படி தெரியக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு தடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேசமயம், விடுதலைப்புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இத்தகைய நினைகூறல்கள் அமைந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணியிருக்கவும் கூடும் என்றும் ருக்கி பெர்னாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
பொதுவாகவே அரசாங்கமும் சரி, ஜேவிபி, மற்றும் விடுதலைப்புலிகள் போன்றவர்களும் சரி, தாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும் அத்துடன் இவ்வாறான நினைவுகூர்தலின் மூலம் அந்தத் தவறுகள் தொடர்ந்தும் நினைவுபடுத்தப்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே தங்கள் தரப்புத்தவறுகள் வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவும் இருந்திருக்கின்றார்கள் என்றும், குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக முன்னைய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இது மிகவும் தவறானது என்றும் தெரிவித்தார் ருக்கி பெர்னாண்டோ.

இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ, சமூகக்குழுமமாகவோ நினைவுகூரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்றும் அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் ருக்கி பெர்னாண்டோ கூறினார்.

நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்பட்டபோதிலும், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வது பற்றியோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ புதிய அரசாங்கம் சாதகமாக இன்னும் எதனையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்த ருக்கி பெர்னாண்டோ, இம்மாதம் 18 ஆம் தேதி அதைப்பற்றிய தனது நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.