ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர்களின் 32ஆவது மாநாடு-

xcvcv32ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலி மாவட்டத்தின் ஹிக்கடுவையில் இன்றையதினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் ஆரம்பமானது. தென் மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இம்முறை இந்த மாநாடு நடைபெறுகின்றது. நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் தலைவராக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா செயற்படுகின்றார். இறுதியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் நடைபெறும் முதலாவது முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு பதிலாக, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி-

rerதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி இன்று இடம்பெற்றது. யாழ் பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுலகத்தில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இந்த நடை பவனி சென்றது. நிலத்தடி நீரை பாதுகாப்போம், சுத்தமாக இருக்கும் நீருக்கு புத்துயிர் அளிப்போம், இன்றைய மழை நீர் சேகரிப்பு நாளைய குடிநீர் பாதுகாப்பு, சொட்டு நீரும் எங்கள் சொத்தே, பொதுமக்கள் விழிப்படையுங்கள், போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் இதில் கலந்துகொண்டனர். மேலும், பிரதம அதிதியாக வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் பாரதிதாசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த மாபெரும் பேரணியினை ஆரம்பித்துவைத்தனர். இப் பேரணி யாழ் ஆஸ்பத்திரி, வேப்படி சந்தியூடாக யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றதோடு, அங்கு சுத்தமான குடிநீர் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது. இதில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கைக்கு விஜயம்-

sfdfdd81 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். குறித்த நிதி மோசடி தொடர்பிலாள விசாரணைகளுக்கு எப்.பி.ஐ உதவுதாக உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் புலனாய்வாளர்கள் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் நியுயோர்க்கில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் வங்கியிலும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிதி மோசடியில் எப்.பி.ஐயின் அதிகாரிகள் பங்களாதேஷ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பங்களாதேஷ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சயிபுல் அலாம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5ஆம் திகதி மோசடிக்காரர்கள் பங்களாதேஷ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த நிதியை நியுயோர்க் மத்திய ரிசர்வ் வங்கி ஊடாக கொள்ளையிட்டு பிலிப்பைன்ஸில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

1000 ரூபா சம்பளம் கோரி தொழிலாளர்கள் போராட்டம்-

ytuyபொகவந்தலாவ – ஜேப்பல்டன் பூசாரி தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இதுவரையிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் மௌனம் காப்பது பெரும் கவலையளிப்பதாக உள்ளது எனவும், அவர்கள் கூறினர். இதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முடிவு கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.