சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணில் ஐதேக உறுப்பினர்கள் 500 பேர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள, மக்கள் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 500 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் எந்த தேவையும் தமக்கு இல்லை எனவும், கட்சியை பாதுகாப்பதே தமது தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more