Header image alt text

இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு

lanka_womenஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. Read more

உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வெயில் 

sunஉலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. Read more

சட்ட விரோத சிறுநீரக வணிகம் ராஜ்குமார் ராவ் குறித்து இலங்கை போலீசார் விசாரணை

kidneyசட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் ராவ் எனும் பிரதான சந்தேக நபர் இலங்கையில் நடைபெற்ற சட்ட விரோத சிறுநீரக வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதனை ஆராய்வதற்கு சிறப்பு போலீஸ் குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகள், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது போலீசார் இதனை அறிவித்தனர். Read more

ஜெயலலிதா – நிர்மலா சீதாராமன் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்க்க வலியுறுத்தல்

jaya_nirmala_seetharamanமத்திய – மாநில அரசுகளுக்கிடையில் முக்கியப் பிரச்சினையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியைப் பொருத்தவரை, தமிழகத்தின் நிதி சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் பல யோசனைகள் ஏற்கப்பட்டாலும், இன்னும் பல அம்சங்கள் தமிழகத்தைப் பாதிக்கும் என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்களுக்காக புதிதாக 50 ஆயிரம் வீடுகளும், ஏற்கெனவே உள்ள 50 ஆயிரம் வீடுகளைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். Read more

இதுவரை அல்லாத அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டது – இலங்கையில்

cocaineஇரண்டு பில்லியன் ரூபாய் மதிப்புடைய 91 கிலோ கோக்கேயின் போதைப்பொருள் பிரேஸிலிலிருந்து வந்த கொள்கலனில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரேஸிலிலிருந்து வந்த சர்க்கரை கொள்கலனில் இருந்து இந்த கோக்கேயின் கண்டெடுக்கப்பட்டது. Read more

இந்தியப்பிரதமர் மோடி – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு

jaya_modiசுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள், நிதி ஆதாரங்கள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, 96 பக்க அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதல்வர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் கமிட்டியையும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். Read more

சங்கானை வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)-

sanganai07தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் சங்கானை வைத்தியசாலைக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. Read more

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

tholpuram045jpgதாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன. தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத் தலைவரும், சிவபூமி முதியோர் இல்லத் தலைவருமான திரு. ஆறுதிருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சக்கர நாற்காலிகளைக் கையளித்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சி ஐங்கரன், பிரதேச வைத்திய அதிகாரி, வலிமேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.சபாநாயகம் மற்றும் எஸ். ஐயலிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். Read more

கோட்டைக்காடு அரசினர் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)-

jaffna01தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் யாழ். வட்டுக்கோட்டை கோட்டைக்காடு அரசினர் வைத்தியசாலைக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்படி படுக்கை வசதிகளும், வைத்திய உபகரணங்களும் மேற்படி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மேற்படி பொருட்களை வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சி ஐங்கரன், மற்றும் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

இளங்கதிர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த வினளயாட்டுவிழா -(படங்கள் இணைப்பு)-

GT04வவுனியா கல்நாட்டினகுளம் இளங்கதிர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த வினளயாட்டுவிழா அண்மையில் கல்நாட்டினகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சார்பாக முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வினோ அவர்களும்; வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ G.T. லிங்கநாதன் அவர்களும். கல்மடு கல்நாட்டினகுளம் கிராம அபிவிருத்தி சங்கதலைவர்கள், கோயில் தலைவர்கள். விளையாட்டு கழக உறுப்பினர்கள். பொதுமக்கள் என பலபேர் கலந்து கொண்டனர். இறுதியாக பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது.
Read more