v.koddai04v.koddai02வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்திவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டை சேர்ந்த் கதிர்செல்வன் கருணநிதி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இக் கிணறு புலம் பெயர் நாட்டில் உள்ள கருணை உள்ளம் கொண்ட அன்பர்களின் நிதி அனுசரைனையுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த கால யுத்தத்தினால் கணவனை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தனது 10வயது மகனுடன் வாழ்ந்து வரும் இவர் தனது குடும்ப நிலைப்பாட்டினை தெரிவித்து கடந்த 2015ம் ஆண்டு 10 மாதம் 28ம் திகதி யுத்தகாலத்தில் முற்றாக அழிவடைந்த கிணற்றினை கட்டித்தருமாறு எமக்கு கடிதம் ஒன்றின் மூலம் விண்ணப்பிந்திருந்தார். இவரின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக எமது சங்கத்தின் மூலம் 2015. 12மாதம். 07ம் திகதி 12பை சீமெந்து வழங்கப்பட்டது. (10000ரூபா) இதனை தொடர்ந்து 2ம் கட்டமாக மலேசியாவைச் சேர்ந்த கனகனேந்திரன் மற்றும் ஆவுஸ்ரேலியாவைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோரின் நிதி அன்பளிப்பின் மூலம் 2016 04மாதம் 15ம் திகதி 28 திகதி சீமெந்து பைகள் வழங்கப்பட்டது(ரூபா 23520). இவற்றினைக் கொண்டு கிணற்றுக்கு தேவையான கற்கள் அரிந்து கொண்டாலும் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கிணற்று வேலையினை ஆரம்பிக்க முடியவில்லை.

கடந்த வருடம் பெய்த கடும் மழையின் காரணமாக முற்றாக துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனால் தனது வீடும் இடிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் வீட்டில் கிணறு இன்மையினால் தனது பொருளாதார மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு பிரச்சனை என்பவற்றை கவனத்தில் கொண்டு கிணற்றினை கட்டித்தருமாறு மீண்டும் கடிதம் ஒன்றின் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இவரின் நிலையினை புரிந்து கொண்டு மூன்றாம் கட்டமாக கிணற்றினை கட்டி பூரணப்படுத்துவதற்காக எமது சங்கத்தினுடாக லண்டனைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரால் ரூபா 188000 மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மகேஸ்வரன் தனஞ்சயன் மார்க்கண்டு விக்கினேஸ்வரன் சுவாமிநாதர் சிறிக்காந் கதிரவேலு செழியன் (ரூபா 66350) ஆகியோரின் நிதி அன்பளிப்பின் மூலம் பூரணமாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ் பெண்தலைமைத்துவ குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அடிப்படைத் தேவையான கிணற்றினை கட்டி முடிப்பதற்கு எமது சங்கத்தின் ஊடாக நிதி அன்பளிப்பினை வழங்கிய எமது புலம்பெயர் உறவுகளுக்கு பயனாளி சார்பிலும் எமது சங்கத்தின் சார்பிலும் நன்றிகளை கூறிக்கொள்வதுடன். இவ் நல்லுள்ளம் கொண்டவர்களும் இவர்களது குடும்பங்களும் நீண்ட ஆயுளுடனும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

v.koddai02

v.koddai01 v.koddai03 v.koddai05 v.koddai06 v.koddai07 v.koddai08