kaluthrai02இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாகவும், 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றதுகுறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். 
இரத்தினபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு தாய், மகள் உள்ளிட்ட 10 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இம்மரணங்களை தவிர மரக் கிளை முறிந்து விழுந்த சம்பவம் போன்ற சம்பங்களிலும் ஓரிரு மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நகரங்களிலும், கிராமங்களிலும் வெள்ளம் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீட்பு பணியில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பிரதான நீர் நிலைகளிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்ட உயர்ந்துள்ளதையடுத்து அதன் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இரத்தினபுரி நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உள்ள அவசர சேவை பிரிவு இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேரழிவு மேலாண்மை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஐ.நா, சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனை குழு மற்றும் அண்டை நாடுகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கோரியுள்ளது. குறிப்பாக தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளில் உதவி வழங்குமாறு கோரியுள்ளது.

kaluthrai02kaluthrai06kaluthrai04kaluthrai03kaluthrai05kaluthrai01