இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் ஆகியோரை கடந்த புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்தித்தார்.

வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நல்கிய உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு அமைச்சர் ரஷ்யா மற்றும் சீன அரசாங்கங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்தமை குறித்து அமைச்சர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையின் நட்புறவுகள் மற்றும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் இரு நாடுகளின் தூதுவர்களை தனித்தனியாக சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)