வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும் தோழர் ஸ்கந்தா அவர்களின் தந்தையாருமான கந்தர் இளையதம்பி அவர்கள் நேற்று (06/04/2021) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும்” என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவையொன்றினை விரைவில் தொடங்கவுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.