 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றும் (09) 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றும் (09) 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மேலும் 183 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று (09) 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.