நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 212 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,949ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இதுவரை 92308 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 3033 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.