31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 33ஆவது நினைவு நாள் இன்று….
நாட்டில் மேலும் 56 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (29) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலயத்தின் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவனும் கழகத் தோழர் இளையவன் (வேலாயுதம்) அவர்களின் புதல்வனுமாகிய செல்வன் வேலாயுதம் வெனிஸ்ரன் அவர்கள் சுகயீனம் காரணமாக 30.07.2021 வெள்ளிக்கிழமை மரணமெய்தினார்.
நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 308,812ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா இன்று (31) தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் விசேட திட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.