தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய தோழரான மறைந்த தோழர் மாறன் (மார்க்கண்டு தேவதாசன்) அவர்களின் மூத்த சகோதரரும், காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கழகத்தின் முன்னைநாள் மத்திய குழு உறுப்பினருமான தோழர் மார்க்கண்டு ராமதாசன் அவர்கள் நேற்று (03.12.2021) கொழும்பில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
தோழர் நாதன் அவர்களின் துணைவியாரின் மரணச்சடங்கு செலவிற்கு உதவியாக கழகத்தின் பிரித்தானியா கிளைத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 26,051/= தோழர் நாதன் அவர்களிடம் இன்று (04.12.2021) வழங்கி வைக்கப்பட்டது.
3 நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 17 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,440ஆக அதிகரித்துள்ளது.