வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத்திரிகின்றார் . இந்த வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் . எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை யாக இருக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான த. சித்தார்த்தன் தெரிவித்தார். Read more
மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த மறைந்த தோழர் ரகுவரன் (கணபதிப்பிள்ளை வரதராசா) அவர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தங்கரெட்ணம் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் பிரித்தானியா கிளைத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 26,000/= இன்று (10.12.2021) வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸில் வசிக்கும் பிறேமானந்தன் கனிஷ்கா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களால் வழங்கப்பட்ட 30,000/= நிதியுதவியில் வவுனியா கல்வீரன்குளம் உமா கிராம வளர்ச்சித் திட்டத்தில் அமைந்துள்ள மாதிரி வீட்டின் கூரை வேலை இடம்பெற்று வீட்டிற்கான வர்ணப்பூச்சு வேலையும் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். இது அடிப்படை உரிமை.
10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு 157 பேர் ஆதரவாகவும் 64 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன்பிரகாரம் 93 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (10) காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணமானார். இந்தியாவில் விமான விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இராணுவத் தளபதி டெல்லி சென்றுள்ளார்.