ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளைய தினம் (20) 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.