வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வருடத்தின் இதுவரையில் எரிவாயு விபத்துக்களினால் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்பட்ட 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் எரிவாயு வெடிப்புடன் தொடர்புடைய 847 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.