அமரர் வைத்திய கலாநிதி செல்வரத்தினம் லவன் அவர்களின் பூதவுடல் 5ம் ஒழுங்கை, வைரவப்புளியங்குளம், வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றுகாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை முழுதும் கொந்தளிப்பான நிலையை அனுபவித்து வருகின்றதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது. இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.