ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (11.04.2022) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. Read more
சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்றை அமைந்து சவால்களை வெற்றிக் கொள்ள பாராளுமன்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தரம் 5க்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைகுழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இன்று (22) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.