அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளின் தலைவர்கள் இன்று (29) காலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அக்கலந்துரையாடலில் தாம் முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். Read more
இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்வர் பேரவையில் முன் வைத்து பேசினார். இந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.