Header image alt text

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க  0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார். Read more

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (11.04.2022) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. Read more

11.04.2014 ல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் நந்தன் (பசுபதி பரசோதிலிங்கம் – மல்லாவி) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

11.04.1984 ல் ஆரியகுளம் சந்தியில் மரணித்த மாணவர் பேரவையின் தோழர்கள் கேதீஸ்வரன் (தம்பலகமம்), கிருபானந்தன் (கொக்குவில்) ஆகியோரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம்) அவர்களின் பூதவுடல் அவரது வவுனியா தெற்கிலுப்பைக்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது வவுனியா மாவட்ட கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தோழர் கடாபிக்கு கழக கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more