Header image alt text

வவுனியா சமளங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் ஆசிரியர் கௌரவிப்பும் இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. Read more

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று (09) நள்ளிரவு முதல் போராட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தங்கியுள்ளனர். Read more

அரசாங்கத்திலிருந்து பதவி விலகியுள்ள அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்கள், வாகனங்கள், தளபாடங்கள், அலுவலக உபகரணங்களை மீளப்பெற வேண்டுமென அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் திறைசேரி அறிவுறுத்தியுள்ளது. Read more

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றிரவு(10) 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Gota GO Home” போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எங்களுக்கு கோட்டா வேண்டும், “We want Gota” என ​ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கண்டி மற்றும் தங்காலையிலேயே ஆர்ப்பாட்டங்கள் இன்று (10) முன்னெடுக்கப்படுகின்றன.

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை திணைக்களம் விடுத்துள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். காலி முகத்திடலில் இடம்பற்று வரும் போராட்டம் காரணமாக கோட்டை வரை கடும் வாகனநெரிசல் நிலவுகிறது. போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது பதவியை இராஜினாமா செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தான் இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக பல்வேறு தரப்பினரால் தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். Read more

பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது