கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142 ஆவது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று (17) கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு விரைவில் மானியம் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”வுக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தீக்சுடர் ஏற்றி, நினைவுகூரப்பட்டது.