உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று (17) கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு விரைவில் மானியம் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.