அவுஸ்திரேலியாவின் 47ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டாட்சித் தேர்தலில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார் என்பதுடன், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கைப் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more
நாளை (23) நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும் மாணவர்கள், பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் எவ்வித தடையுமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பொதுமக்கள் வழங்க வேண்டும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை விடுத்தார்.
உலக நாடுகளில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மேற்கத்தேய நாடுகளில் புதிதாக ‘மங்கி பொக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு அம்மை பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை நடத்திவருகிறது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது. அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.